மட்டு.திருமலை காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் இடமாற்ற வழக்கு நிறைவடையும்வரை தடையுத்தரவு.

0
655
மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களுக்கான காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நேசகுமாரன் விமர்ராஜுக்கு 01.12.2017 அன்று அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்ட இடமாற்றத்திற்கு எதிராக மேல் முறையீட்டு நீதி மன்றத்தினால் வழக்கு முடியும் வரை நிரந்தர தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது என மனுவை சிரேஷ்ட சட்டத்தரணி ஜீ;ஜீ.அருள்பிரகாசம் தெரிவித்தார்.

மேற்படி தனக்கு எதிராக வழங்கப்பட்ட இடமாற்றத்திற்கு எதிராக நேசகுமாரன் விமலராஜால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் வழக்கானது தவிசாளர் காணிச் சீர்திருத்த ஆணைக்குழு கௌரவ சீனித்தம்பி யோகேஸ்வரன் பாரளுமன்ற உறுப்பினர், பணிப்பாளர் விசாரணை அதிகாரி, காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் காணி சீர்திருத்த ஆணைக்குழு, செயலாளர் காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சு மற்றும் பணிப்பாளர் காணி சீர்திருத்த ஆணைக்குழு அம்பாறை மாவட்டம் ஆகியோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்காளியினால் குற்றம் சாட்டப்பட்டிருப்பதாவது அவருக்கு வழங்கப்பட்ட இடமாற்றம் ஆனது தன்னிச்சையாக எந்த விதமான காரணங்களும் சரியாக காட்டப்படாமல் பாரளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் அவர்களின் அடிப்படையற்ற குற்றச்சாட்டின் பேரில் இந்த இடம்மாற்றம் வழங்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தவிர மேலும் நேசகுமாரன் விமலராஜ் பணிப்பாளராக கடமையாற்றிய போது தன்னுடைய கடமையில் அச்சமின்றி பாகுபாடின்றி சட்ட விரோத காணி அபகரிப்புக்கு எதிராக செயற்பட்டமையால் 22.02.2017 அன்று புன்னக்குடா நில அபகரிப்புக்கு எதிராக நீதிமன்றத்திற்கு சென்று வீடு திரும்பிய அன்றைய தினம் துப்பாக்கி தாக்குதலுக்கு இலக்காகி தற்போது பொலீஸ் பாதுகாப்பபுடன் கடமையில் ஈடுபட்டு வருகின்றார்.
மேலும் மேற்படி மனுவை ஆராய்ந்த நீதி மன்றம் தற்காலிக தடை உத்தரவை 30.11.2017 அன்று பிறப்பித்திருந்தது. இதில் காணி சீர்திருத்த ஆணைக்குழு சார்பில் மேற்படி இடமாற்றத்திற்கு வழங்கியிருந்த தற்காலிக இடையுத்தரவை நீக்கி கொள்ளுமாறு மேல்முறையீட்டு நீதிபதிகளிடம் எழுத்து மூலமாக விண்ணப்பிக்கப்பட்டு 14.03.2018 அன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதி மன்றம் மேற்படி விண்ணப்பத்தை நிராகரித்து நிரந்தரமாக வழக்கு முடியும் வரை இடமாற்றம் வழங்க வேண்டாம் என நிரந்தர தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்ட பின் தனக்கு எதிராக தொடர்ச்சியாக சட்டத்தை மீறும் வகையில் தொடர்ச்சியாக தொந்தரவுகளை தனக்கு ஏற்படுத்துவதாகவும் இதனால் தன்னுடைய அடிப்படை உரிமை மீறப்பட்டது என்று இது சம்மந்தமாக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டு கௌரவ நீதிமன்றத்திற்கு வழக்கறிஞ்ஞர்கள் மூலமாக தெரிவிக்பப்ட்டுள்ளது.
மேற்படி மனுவை சிரேஷ்ட சட்டத்தரணி ஜீ;ஜீ.அருள்பிரகாசம் அவர்களது அறிவூட்டலின் படி ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்த்தன உடன் சட்டத்தரணி எம்.என்.சிறிமானே வழக்குக்கு தோற்றி மேற்படி வழக்கில் நிரந்தரத் தடை உத்தரவை பெற்றுள்ளனர்.
கௌரவ மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் கௌரவ நீதிபதிகளான பத்மன் சுரசேன மற்றுமு; சிறின் குணரத்ன ஆகியோரால் மேற்படி தடையுத்தரவு வழக்கு முடியும் வரை  விதிக்கப்பட்டுள்ளது.