ஹிஸ்புல்லாஹ் சேர் அவர்களே.. !

0
380
நாட்டில் இனவாத தீயைமூட்டி லாபம் அடையும் ஞானசாரா தேரருடன் உங்களின் அன்புக்குறிய ஜனாதிபதி மைத்ரி அவர்கள் நல்ல உறவோடு இருப்பது உங்களுக்கு தெரிவில்லையா?

ஞானசாரா அவர்கள் திகனையில் கொல்லப்பட்ட சிங்கள நபரின் வீட்டுக்குச் சென்று,
அங்கேயுள்ள இனவாதிகளிடம் ரகசிய சந்திப்புக்களை ஏற்படுத்தி தீயை மூட்டிவிட்டு அதே கையோடு ஜனாதிபதி மைத்ரியுடன் ஜப்பான் பயணமானார் அல்லவா?
அப்படியென்றால் ஞானசாரா அவர்களுக்கும் ஜனாதிபதி மைத்ரி அவர்களுக்கும் நல்ல உறவு உள்ளது என்பதும் உங்களுக்கு தெறியவில்லையா?
திகன சம்பவம் நடப்பதற்கு முன் அந்த ஊர் மக்கள் உங்களைப்போன்றோர்களிடம் பாதுகாப்பு உதவிகேட்டு அழுதபோது,
உங்களைப்போன்றவர்கள் ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் விடயத்தை எடுத்துக்கூறி பாதுகாப்பு கேட்டீர்கள் அல்லவா?
அதிகாரங்களை கையிலே வைத்திருக்கும் அவர்கள் அந்த மக்களுக்கு பாதுகாப்பு கொடுத்தார்களா?
இப்படிப்பட்ட ஜனாதிபதியையும் பிரதமரையும் உங்களால் பெயர் சொல்லி கண்டிக்கமுடியாமல், பொலிஸ்மா அதிபரை ராஜிநாமா செய்யச்சொல்லுகின்றீர்ளே அது உங்களுக்கு நியாயமாக படுகின்றதா?
இதையெல்லாம் உங்களிடம் கேட்பதற்கு காரணம் நீங்கள்தான் பாராளுமன்றத்தில் ஆக்ரோசமாக பேசியவர் என்பதனாலாகும். அப்படிப்பட்ட நீங்கள் இன்று சிரித்த முகத்தோடு அதே ஜனாதிபதியுடன் பாகிஸ்தான் போகின்றீர்களே அங்கே இலங்கையில் நடந்த இனவன்முறைகள் பற்றி கேள்வி எழுப்பட்டால் நீங்கள் என்ன பதில் கொடுப்பீர்கள்?
ஆகவே உங்களைப்போன்றவர்கள் அரசாங்கங்களோடு இணைந்து பதவிகளைப்பெற்று அதன் மூலம் சேவைகளைச் செய்தாலும், உரிமை விடயத்தில் சமூகத்தை ஒட்டுமொத்தமாக காட்டிக்கொடுத்துவிடுகின்றீர்கள் என்பதுதானே அர்த்தம்.
இன்று உங்களைப்போன்றவர்கள் எதிர்க்கட்சியிலிருந்தால் உங்களை ஜனாதிபதி பாகிஸ்தான் அழைத்துசென்றிருப்பாரா?
 உங்களை அழைத்து செல்லும் நோக்கம் என்னவென்றாவது உங்களுக்கு புரியவில்லையா?
அப்படியென்றால் ஜனாதிபதி ஜப்பானுக்கு செல்லும்போது ஏன் உங்களைப் போன்றவர்களை அழைத்துச் செல்லவில்லை?
அப்படியென்றால் பாகிஸ்தானுக்கு போகும்போது ஏன் ஞானசாராவை அழைத்து செல்லவில்லை என்ற விடயமாவது உங்களுக்கு புரியவில்லையா?
நாட்டிலே அவசரகாலச் சட்டம்போட்டு அடக்குமளவுக்கு இனவன்முறை தாண்டபமாடியபோது உங்கள் ஜனாதிபதி உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் இவ்வளவு சேதம் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்குமா?
அடிஅடியென அடித்துவிட்டு பிறகு வந்து, அடித்த இடத்துக்கு ஒத்தனம் கொடுப்பது அடிபட்டவனுக்கு தீர்வாக அமையுமா?
ஹிஸ்புல்லாஹ் சேர் அவர்களே தயவு செய்து பாகிஸ்தான் அரசாங்கத்திடம் இங்கே ஒன்றுமே நடக்கவில்லையென்றுமட்டும் சொல்லிவிடாதீர்கள். அப்படிக்கூறினால் நாளை கியாமத்து நாளில் இறைவனிடம் பதில் சொல்லவேண்டிவரும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
அது இஸ்லாத்தின் பார்வையில் எந்தளவு நோக்கப்படுமென்றால். கண்ணால் கண்ட உண்மைச் சம்பவத்தை தனது சுயநலனுக்காக மறைக்கின்ற குற்றமாகும்.
இதற்கு இறைவனின் தண்டனை என்னவென்பதை நீங்களும் அறிவீர்கள் என்று கூறி முடிக்கின்றேன்.
எம்.எச்.எம்.இப்றாஹிம்
கல்முனை…