1.8 மில்லியன் மக்கள் குடிப்பதற்கு தகுந்த நீரைப் பயன்படுத்தாத நிலைமை

0
385

தற்போது நீர் தொடர்பில் 20 மில்லியன் மக்கள் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றார்கள் மேலும் 2050 ஆம் அண்டு ஆகின்றபோது 3 பில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்கள். என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது 1.8 மில்லியன் மக்கள் குடிப்பதற்கு தகுந்த நீரைப் பயன்படுத்தாத நிலைமை காணப்படுகின்றது.என யுஸ்.எயிட் நிறுவனத்தின் பிரதிக் காரியாலய பணிப்பாளர் அலேனா தன்ஸே தெரிவித்தார்.

உலக நீர் திகத்தை முன்னிட்டு யுஸ்.எயிட் நிறுவனத்தின் அனுசரணையில் பாம் பவுண்டேனச் நிறுவனம் மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளியில் அமைந்துள்ள கலாசார மத்திய நிலையத்தில் நிகழ்வொன்றை வியாழக்கிழமை (22) ஏற்பாடு செய்திருந்தது.

இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

போரதீவுப்பற்று; பிரதேச செயலாளர் ஆர்.இராகுலநாயகி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார், மற்றும் யுஸ்.எயிட். நிறுவன பிரதிநிதிகள் பாம் பவுண்டேசன் நிறுவனத்தின் பணிப்பாளர் சுனில் தொம்பேபொல, மற்றும் அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

நீர் தொடர்பில் உலகத்தில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம், மற்றும் உலகத்தில் ஏற்படுள்ள சர்ச்சைகள் தொடர்பில் நாங்கள் அவதானித்துக் கொண்டிருக்கின்றோம். இவற்றுள் வரட்சியும், நீர் மாசடைவதும் மிக முக்கியமான அம்சமாகக் காணப்படுகின்றது. நீர் உடலுக்கு மாத்திரமின்றி வாழ்வாதாரத்திற்கும் தேவையானது என்பதை நாம் அனைவரும் அறிந்த விடையமாகும்.நீர் தொடர்பில் தமிழ் மொழியில் பல விடையங்கள் சொல்லப்பட்டுள்ளன.

தற்போது நீர் தொடர்பால் 20 மில்லியன் மக்கள் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றார்கள் 2050 ஆம் அண்டு ஆகின்றபோது 3 பில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்கள். என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது 1.8 மில்லியன் மக்கள் குடிப்பதற்கு தகுந்த நீரைப் பயன்படுத்தாத நிலைமை காணப்படுகின்றது. பல கிணறுகளில் நீர் இருந்தாலும் அங்குள்ள நீர் அருந்துவதற்கு ஏற்றதாகக் காணப்படவில்லை. யுஎஸ் எயிட் நிறுவனம் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய 15 மில்லியன் மக்களுக்கு நீர் வழங்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கடந்த வருடம் 15000 இலங்கை மக்கள் எமது நிறுவனத்தினால் நீர் தொடர்பான நன்மைகளைப் பெற்றுள்ளார்கள்.

எமது இந்த செயற்றிட்டம் இலங்கையில் இருக்கின்ற ஒரு அரச சார்பற்ற நிறுவனத்தினால் முன்நெடுக்கப் படுகின்றதையிட்டு நான் பெருமையடைகின்றேன். இலங்கையில் யுஎஸ்.எயிட் நிறுவனம் 1970 ஆம் ஆண்டிலிருந்து நீர் தொடர்பான பணிகளை மேற்கொண்டு வருகின்றது. எமது நிறுவனம் மக்களுக்கு தூய்மையான நீரைப் பெற்றுக் கொடுக்கும் நோக்குடன்தான் செயற்பட்டு வருகின்றது. அவற்றுள் மழை நீர் சேகரிப்பு, குழாய் மூலமான நிர் வழங்கள் போன்ற செயற்றிட்டங்களை மேற்கொள்கின்றோம். அதுபோன்று சிறிய கட்டுமானப் பணிகளினூடாக இப்பகுதியில் வரும் அனர்த்தங்களைத் தடுக்கக் கூடிய செயற்பாடுகளையும் முன்நெடுக்கப்படுகின்றோம். இலங்கையில் நாம் றெயின்கோ மற்றும் பாம் ஆகிய 2 நிறுவனங்களுடாகவும்தான் நாம் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம். இவற்றால் நீரைச் சேமிக்கும் செயற்பாடுகளும் இதனால் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றால் மக்களுக்கு ஒரு சிறப்பான வாழ்வைக் கொண்டு செல்லும் வாய்ப்பு மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்களுக்கும் இது ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளன. இவற்றால் மாணவர்கள் பல சவால்களைச் சமாளித்துள்ளனர்.

எனவே எமது இச் செயற்றிட்டத்தை அரசாங்கத்தின் நிருவாக்க கட்டமைப்புக்களினூடாகவும், மக்களின் ஒத்துழைப்புடனும்தான் மேற்கொள்ள முடிந்துள்ளது. இவற்றால் எமது இச்செயற்பாடு மக்கள் மத்தியில் வெற்றி பெற்றுள்ளது. என்றார்.

இந்நிகழ்வில் முடிவில் யுஸ்.எயிட் நிறுவனத்தின் பிரதிக் காரியாலய பணிப்பாளர் அலேனா தன்ஸே உள்ளிட்ட பிரதிநிதிகள் மட்.திருக்கொன்றை முன்மாரி பாடசாலைக்குச் சென்று நீர் இணைப்பைத் திறந்து பாடசாலையின் பாவனைக்கு வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்