ஈழத் தமிழர்களுக்கு நீதி கோரி உலகளாவிய நீதியில் சேர்க்கப்பட்ட கையெழுத்துக்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில்

0
333

அனைத்துலகத் தமிழர் பேரவை-தமிழர் இயக்கம் சார்பில் ஈழத் தமிழர்களுக்கு நீதி கோரி உலகளாவிய நீதியில் சேர்க்கப்பட்ட கையெழுத்துக்கள் இன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

அனைத்துலகத் தமிழர் பேரவை-தமிழர் இயக்கம் சார்பில் ஈழத் தமிழர்களுக்கு நீதி கோரி உலகளாவிய நீதியில் வழக்கறிஞர்களிடம் மாபெரும் கையெழுத்து  இயக்கம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது.

சென்னையில் கடந்த வாரங்களில் இடம்பெற்ற கையெழுத்து இயக்கத்தில் கட்சிகள், அமைப்புகளைக் கடந்து பெரும் திரளாக ஒன்றிணைந்து  வழக்கறிஞர்கள் கையெழுத்திட்டனர்.

கையெழுத்துப் போராட்டம் தொடர்பில் அனைத்துலகத் தமிழர் பேரவை-தமிழர் இயக்கம் கருத்து  தெரிவித்தபோது இலங்கை அரசாங்கத்தால் தமிழர்கள் மீது திட்டமிட்டு மேற்கொண்ட, மேற்கொண்டுவரும்
இனவழிப்பிற்கு சர்வதேச சமூகத்தின் முன்  நீதிகிடைக்க வேண்டும் என்று கருதுகிறோம். இந்த நோக்கத்துக்காக உலகெங்கும் மனித நேயத்துடன்  களமாடிக்கொண்டிருக்கின்ற  அனைத்து  வழக்கறிஞர்களும் இக்கையெழுத்து இயக்கத்தில் பங்கெடுக்க வேண்டும் என்று  பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்கள் சார்பில் வேண்டுகிறோம் என்று தெரிவித்தனர். அத்துடன் தமிழ் மக்கள் தமது அரசியல் தலைவிதியைத் தீர்மாணிக்க சர்வசன வாக்கெடுப்பே ஒரே தீர்வென்றும் தெரிவித்தனர்.

தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் எமது
விடுதலைப் பேராட்டம் தமிழகத்தில்  துளிர் விட்ட காலப்பகுதியில் எமது அமைப்பின் சார்பில் எமது மக்களின்  அவலங்களை  வெளிப்படுத்தும் துண்டுப்பிரசுரங்கள் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது.

கடந்த 30 ஆண்டுகளிற்கு பிறகு தமிழகத்திலே அனைத்துலக ரீதியாக செயற்படும் ஒரு அமைப்பின் பிரமாண்டமான சுவரொட்டி விளம்பரம் வெளிவந்து தமிழக மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

உலகிலே அதிகமான மக்கள் வாழும் நகரங்களில் ஒன்றாகவும் தமிழர்கள் அதிகளவில்  வாழும்   நகரமாக விளங்கும் சென்னை மாநகரிலே  குறித்த விழிப்புணர்வுச் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின்  உரிமைக்காக சட்டரீதியான மற்றும் மனித உரிமை தளத்திலே பணியாற்றிய செயற்பாட்டாளர்களை
ஒருங்கிணைத்து அண்மையில்  களமிறங்கியுள்ள அனைத்துலக தமிழர் பேரவை-தமிழர் இயக்கத்தின் பெயரில் குறித்த சுவரொட்டி
வெளிவந்துள்ளது.

அனைத்துலக தமிழர் பேரவை-தமிழர் இயக்கத்தின் செயற்பாடுகள் தமிழக மக்களை மட்டுமல்ல தாயக மற்றும் புலம்பெயர் மக்களையும் நம்பிக்கை கொள்ள வைத்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.