முனைப்பினால் 34 பேருக்கு வாழ்வாதார உதவிகள்

0
982

முனைப்பு சிறிலங்கா நிறுவனத்தின் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழக்கை தரத்தினை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் இவ்வாண்டு (2017) 34 பேருக்கு வாழ்வாதாரத்துக்கான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன் அத்திட்டங்கள் ஊடாக பயனாளிகள் நாளாந்த வருமானத்தைப்பெற்று வருவதாக முனைப்பின் சிறிலங்காநிறுவனத்தின் செயலாளர் இ.குகநாதன் தெரிவித்தார்.
மட்டக்களப்பிலுள்ள தெரிவு செய்யப்பட்ட சில குடும்பங்களுக்கு வாழ்வாதர உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு (9.12.2017) சனிக்கிழமை மாலை மட்டக்களப்பு கச்சேரியில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
முனைப்பின் சிறிலங்காநிறுவனத்தலைவர் மா.சசிகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்

பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கி வைத்தார்.
சுவிட்சர்லாந்து முனைப்பு நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் இந்த வாழ்வாதார உப கரணங்கள் வழங்கப்பட்டன.
இந்த வைபவத்தில்; மட்டக்களப்பு மாவட்ட செயலக கணக்காளர் நேசராசா மற்றும் மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கே.சித்திரவேல் மற்றும் சுவிட்சர்லாந்து முனைப்பு நிறுவனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் மாணிக்கப்போடி.குமாரசுவாமி உட்பட முனைப்பு சிறிலங்கா நிறுவனத்தின் பொருளாளர் அரசரெத்தினம் தயானந்தரவி , உப செயலாளர் எல் தேவஅதிரன் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.