மத சிறுபான்மையினர் மற்றும் மனித உரிமைகள் விடயத்தில் இலங்கை அரசு எடுத்துள்ள தீர்மானத்தை அமெரிக்கா வரவேற்கின்றது

0
373

மத சிறுபான்மையினர் மற்றும் மனித உரிமைகள் விடயத்தில் இலங்கை அரசு எடுத்துள்ள தீர்மானத்தை வரவேற்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இது தொடர்பாக இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் புதன்கிழமை மாலை (21.03.2018) வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இலங்கையிலிருந்து வந்த பிரதிநிதிகளை அமெரிக்கா வரவேற்கின்றது.

படையினர், மனித உரிமைகளுக்கெதிரான வன்முறைகள், துஷ்பிரயோகங்கள், சித்திரவதைக்கான பொறுப்பு, மத சிறுபான்மையினருக்கெதிரான வன்முறைகள் ஆகியவை தொடர்பாக எங்களது பரிந்துரைகளை ஏற்று, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 30ஃ1 உள்ளடக்கங்களை பொறுப்புக் கூறலுடன் முழுமையாக அமுல்படுத்த அரசு எடுத்துள்ள முடிவை நாம் வரவேற்கின்றோம்.

அரசு ஆதரவுடனான இந்தப் பரிந்துரைகளில் நாம் மகிழ்ச்சி அடைகின்றபோதிலும், பாதுகாப்பு சேவைகளின் உறுப்பினர்கள், மற்றும் மத சிறுபான்மை சமூகங்களின் உறுப்பினர்களை இலக்குவைத்து அண்மையில் நடாத்தப்பட்டுள்ள தாக்குதல்கள் சம்பந்தமாக மனித உரிமை மீறல்கள் பற்றி அறிக்கையிடப்பட்டு வரும் விடயங்களில் நாம் கவலை கொண்டுள்ளோம்;.

அத்துடன் அரசாங்கம் மனித உரிமை மீறல்கள் மற்றும் மீறல்களுக்கு பொறுப்பான அனைவரையும் பொறுப்புக் கூறலுக்கு உட்படுத்துமாறும் மத சிறுபான்மையினர் வழிபாடுகள் நடாத்தும் இடங்களைப் பாதுகாக்குமாறும் நாம் மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றோம்.

மேலும் முழுமையாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானம் 30ஃ1 மற்றும் அதனை மீளுறுதி செய்து கொண்ட தீர்மானம் 34ஃ1 ஆகியவற்றை மேலும் முன்னெடுக்க நடவடிக்கைகளை எடுக்குமாறும் அரசாங்கத்தைக் கோருகின்றோம்.

நாம் இலங்கையில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ருPசு பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்று செயல்படுத்தி முன்னேற்றம் அடைவதை ஆவலோடு எதிர்பார்த்திருக்கின்றோம்