மட்டக்களப்பு பெண்கள் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு

0
467

வலுவான பெண் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கிறாள் என்ற தொனிப் பொருளில் சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு பெண்கள் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் சர்வதேச மகளிர் தின நிகழ்வும் பெண்களின் உற்பத்திப் பொருட் கண்காட்சியும் நடைபெற்றது .
கண்காட்சியினை மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே.குணநாதன், உதவிப்பிரதேச செயலாளர் எஸ்.யோகராஜா உள்ளிட்ட அதிதிகள் திறந்து வைப்பதனர்.
மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட பெண் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டது .
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் எஸ் .யோகராஜா ,பிரதேச செயலக கிராம சேவை நிர்வாக உத்தியோகத்தர் எஸ் .தில்லைநாதன் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் , பெண் சுயதொழில் முயற்சியாளர்கள் , சமுர்த்தி பயனாளிகள் ,பொதுஅமைப்புக்களின் அங்கத்தவர்கள் , என பலர் கலந்துகொண்டனர் .