கொக்கட்டிச்சோலையில் மகளீர் தின நிகழ்வு

0
310

(படுவான் பாலகன்) “வலுவான பெண், முன்னேற்றத்திற்கு வழிவகுக்கின்றாள்” என்ற தொனிப்பொருளில் மகளீர் தின நிகழ்வு கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் இன்று(21) புதன்கிழமை மாலை நடைபெற்றது.

இதன் போது, மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளில் கற்று, 2016ம் ஆண்டு பல்கலைக்கழகத்திற்கு தெரிவான பெண் மாணவர்கள் பரிசில் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மேலும், நடன நிகழ்வுகளும், பேச்சு, கவிதை போன்ற நிகச்சிகளும் இடம்பெற்றன.

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி சிறிகாந் மற்றும் பிரதேச திணைக்களங்களின் பெண் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.