யோகேஸ்வரன் எம்.பியில் பன்முக நிதி உபகரணம் வழங்கல்

0
251

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனின் 2017ம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்திற்கான பொருட்கள் வழங்கும் நிகழ்வு  வாழைச்சேனை பிரதேச செயலக கேட்போர் கூட்டத்தில் செவ்வாய்கிழமை மாலை இடம்பெற்றது.

வாழைச்சேனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சிவநேசராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் கலந்து கொண்டு பொருட்களை வழங்கி வைத்தார்.

இதன்போது புதுக்குடியிருப்பு பத்திரகாளி அம்மன் ஆலயம் கணனி, கண்ணகிபுரம் நாகதம்பிரான் ஆலயம் ஒலிபெருக்கி, சுங்கான்கேணி முதியோர் சங்கம் தளபாடம், கும்புறுமூலை கிராம அபிவிருத்திச் சங்கம் ஒலிபெருக்கி, கிண்ணையடி சிவன் கோயில் ஒலிபெருக்கி, மீராவோடை மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம் ஒலிபெருக்கி, கல்மடு கிராம அபிவிருத்திச் சங்கம் ஒலிபெருக்கி, மருதநகர் கிராம அபிவிருத்திச் சங்கம் தளபாடம், கல்குடா கிராம அபிவிருத்திச் சங்கம் ஒலிபெருக்கி, பட்டியடிச்சேனை கிராம அபிவிருத்திச் சங்கம் தளபாடம் என்பன வழங்கி வைக்கப்பட்டது