பழிவாங்குகின்ற பழிதீர்க்கின்ற நையாண்டி செய்கின்ற செயற்பாடுகள் இருக்க கூடாது.

0
256

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து உள்ளுராட்சி சபைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் தோற்றவர்களை நண்பர்களாக்கி வாக்களிக்காதவர்களை ஆதரவாளர்களாக்கிக்கொண்டு ஆரோக்கியமான திசையை நோக்கி பயணிக்கவேண்டியவர்களாக இருக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்றங உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் உள்ளுராட்சி சபைகளுக்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான சத்தியப் பிரமாண நிகழவு மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் செவ்வாய்கிழமை (20) நடைபெற்றது இங்கு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்;.

அவர் தொடர்நது உரையாற்றுகையில் – தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து உள்ளுராட்சி சபைகளுக்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் தங்களுக்கு வாக்களித்தவர்களை மாத்திரம் திருப்திப்படுத்தாது வாக்களிக்காதவர்களையும் திருப்பதிப்படுத்தி தவறான பாதையில் சென்றவர்கைளயும் எங்களது ஆதரவாளர்களாக மாற்றியெடுக்க வேண்டிய கைங்கரியங்கள் உறுப்பினர்களிடம் இருக்க வேண்டும். பழிவாங்குகின்ற பழிதீர்க்கின்ற நையாண்டி செய்கின்ற செயற்பாடுகள் இருக்க கூடாது.

உறுப்பினர்களின் நிதிசார்ந்த செயற்பாடுகள் கவனமாக இருக்குமாகவிருந்தால் உங்களது கைகள் சுத்தமான கைகளாக இருக்க வேண்டும். மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்துவிட்டார்கள் பிரதிநிதிகள் தங்களது தலைவர்களைத் தெரிவுசெய்வதற்கு அவர்களுக்கு ஜனநாயக உரிமை உள்ளது. ஆகால் தமிழ் தேசிய கூட்டமைப்பினைப் பலவீனப்படுத்தும் வகையில் நாங்கள் வாய்வேட்டுகளைச் செய்துவிடக்கூடாது.

தனிப்பட்ட விருப்பு வெறுப்பு நிறைவேற்ற முடியாமல் போவதற்காக கட்சி கொள்கைகளுக்கு அமைவாக எடுக்கின்ற முடிவுகளில் உறுப்பினர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

காலதாமத்ப்பட்ட வேட்பாளர் தெரிவு, முதலாம் தர நிலையில் தகுதி உள்ளவர் இருந்தும் அவரை புறம் தள்ளிவிட்டு ஏனையவர்களை தங்களுடை விருப்பு வெறுப்புகளுக்காக சிபாரிசு செய்தமையும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இந்த தேர்தலில் சில இடங்களில் பின்னடைவுக்க காரணங்களாக உள்ளன.

நாங்கள் தனித்து நின்று எதையும் சாதிக்க முடியாது. எங்களது சொந்த நலன்களுக்கு அப்பால் கட்சிகள் எடுக்கின்ற முடிவுகள் எல்லோருக்கும் பொது நலனைப் பேணக்கூடியதாக இருக்கமாகவிருந்தால் நாங்கள் கட்டுமானத்துக்குள் நாங்கள் வந்துதான் ஆகவேண்டும்” என்றார்