கிராமந்தோறும் இளைஞர்கள் மாணவர்களின் கல்வியில் விழிப்படைய வேண்டும். இரா.சாணக்கியன்

0
362

கிராமங்கள் தோறும் இளைஞர்கள் மாணவர்களின் கல்வியில் விழிப்படைய வேண்டும் என இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளார் இரா.சாணக்கியன் பழுகாமம் நண்பர்கள் அமைப்பிற்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைக்கும் போது தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

பழுகாமம் நண்பர்கள் அமைப்பிலுள்ள இளைஞர்கள் எதுவிதமான எதிர்பார்ப்புமின்றி நான்கு வருடங்களுக்கு மேலாக பல தடைகளையும் தாண்டி தமது ஊர் மாணவர்களின் கல்வியில் வளர்ச்சி போக்கை நோக்கி செல்ல வேண்டும் என்பதள்காக பல தியாகங்களை செய்து மாணவர்களின் கல்வியில் அக்கறை கொண்டு செயற்படுகின்றனர். இவர்களைப் போல் பின்தங்கிய படுவான்கரை பிரதேச கிராம இளைஞர்கள் செயற்படுவார்களேயானால் தமிழ் மாணவர்களின் கல்வியில் பலத்த மாற்றமொன்றை கொண்டு வரலாம். இவ்வாறான கல்வி செயற்பாடுகளுக்கு எமது அமைப்பு கூடியளவு நிதியினை ஒதுக்கி திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம். மேலும் உதவி செய்வதற்கும் தயாராக இருக்கின்றோம்.

ஊர்சுற்றி கேளிக்கை செய்யும் வயதில் அவற்றை தியாகம் செய்து சமூகமயமாக்கப்பட்ட நிலைக்கு மாறுவதென்பது சுலபமான காரியமல்ல. இருந்தாலும் அவ்வாறு மாற வேண்டிய கட்டாயம் எமது பின்தங்கிய சமூகத்திற்காக செய்ய வேண்டியுமுள்ளது. அப்போது தான் கல்வியில் நமது பிரதேசங்களில் மற்றும் பாடசாலைகளில் வளர்ச்சி போக்கினை காட்டலாம். இன்னும் சமூகம் மீது அக்கறையில்லாமல் இருந்தால் எமது எதிர்கால சந்ததியினரின் நிலை கேள்விக்குறியாகிவிடும். கிராமங்கள் தோறும் இளைஞர் யுவதிகள் மாணவர்களின் கல்வியின்பால் விழிப்படைய வேண்டும் எனவும் தெரிவித்தார்.