இணைந்த வடகிழக்கில் முஸ்லீம் மக்களுக்கான தனி அலகு ஒன்று வழங்கப்படவேண்டும்

0
490

பொன்ஆனந்தம்

இணைந்த வடகிழக்கில் முஸ்லீம் மக்களுக்கான தனி அலகு ஒன்று வழங்கப்படவேண்டும்.இதனை எமது தமிழ் மக்கள் பேரவை விலியுறுத்தி வருகிறது.என வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்தார்.

இன்று திருகோணமலை நகர சபை மண்டபத்தில் நடந்த தமிழ்மக்கள் பேரவையினால் ஏற்பாடுசெய்யப்பட்ட கருத்தரங்கில் அவர் தலமையுரையாற்றும் போது மேற்படி கருத்தை அவர் முன்வைத்தார்.இந்நிகழ்வில் பல அரசியல் ஆய்வாளர்கள் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டு விளக்கமளித்தனர்.

இங்கு தொடர்ந்து பேசிய முதலமைச்சர் குறிப்பிடுகையில்,வடகிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டியது என்பது ஒரு சர்ச்சைக்குரிய விடயமல்ல. இந்தமண்ணில் வாழுகின்ற தமிழ் மக்களும் முஸ்லீம் மக்களும் இணைந்து பேசி எடுக்கப்பட வேண்டிய விடயமாகும் எமது எதிர் கால சந்ததியின் நன்மைகருதி அவ்வர்களின் எதிர் காலத்தை நாம் அடகு வைக்கப்படாது.

ஆகவே வடகிழக்கு இணைப்பை நாங்கள் பற்றிக்கொள்ளவேண்டும் எவ்வாறாவது நாங்கள் அதனைப் பெற்றுக்கொள்ளவேண்டும். தமிழ்பேசும் சமூகங்களின் பாதுகாப்பு, அவர்களது பண்பாடு கலாசாரவிடயங்களின் வளர்ச்சி கருதி இதனை நாம் செயற்படுத்தவேண்டியுள்ளது.

எமது அரசியல் வாதிகள் சிலர் வடகிழக்கு இணைப்பு கிடைக்காது ஆகவே மாற்றுத்திட்டங்களை நாங்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றெல்லாம் சொல்கிறார்கள்.18 வருடங்கள் இந்த வடகிழக்கு இணைந்திருந்தது என்பதனை அவர்கள் மறந்து விட்டார்கள்.அது இந்தியாவின் அனசரணையுடன் பெறப்பட்டது என்று அவர்கள் கூறுகின்றார்கள். ஏன் எமது மகாண சபைகளும் இந்தியாவினால்தானே கொண்டு வரப்பட்டது தானே.

நான் ஒரு பௌத்த தேரர் ஒருவருடன் உரையாடும் சந்தர்பம் கிடைத்தது. அவர் வடகிழக்கு இணைக்கப்பட்டால் சிங்கள மக்களை வடகிழக்கில் இருந்து தமிழர்கள் விரட்டிவிடுவார்களோ? என்ற அச்சம் தமது மக்கள் மத்தியில் நிலவுவதாக கூறினார். ஏன் நீங்கள் வடக்கு கிழக்கை இணைக்க வேண்டும் எனகோருகிறீர்கள்? என மேலும் என்னிடம் கேட்டார். அதில் என்ன பிழை என்று கேட்டேன். அதனைக்கேட்கப்போக சிங்களவர்கள் தமிழர்களை விரட்டிவிடுவார்களோ? என்று பயப்பிடுகிறேன் என்று அவர் சொன்னார். எல்லாவற்றிலும் அதுதான் இடிக்கின்றது. பெரும் பான்மையினர் எம்மை அடித்து துன்புறுத்தி எம்மை அவர்களது வளிக்கு கொண்டுவந்த விட்டார்கள் என்பதனை அந்த மனிதரில்தான் கண்டுகொண்டேன்

எதற்காக வடக்கையும் கிழக்கையும் இணைக்க கோருகின்றோம்? முதலாவது வடக்கும் கிழக்கும் தொடரான தமிழ்பேசும் பிரதேசங்களாகும்.இது காலாகாலமாக இருந்த வந்துள்ளன.1933ம்ஆண்டில், பிரிந்திருந்த இந்த நாட்டின் அரசியல் அலகுகளை ஒரே நிர்வாக அலகாக மாற்றியிருக்கா விட்டால். வடக்கு கிழக்கு இணைந்த ஒரு தமிழ் பேசும் பிரதேச மாக இருந்திருக்கும். நாட்டை நிர்வாகத்திற்காக ஒருங்கிணைத்து விட்டு சென்ற ஆங்கிலேயர்கள் சிறுபான்மையினத்தினருக்கு என்ன நடக்கும் என்பதனை வெகுவாக சிந்திக்க வில்லை.அரசியல் யாப்பின் உறுப்புரை 29 அவர்களை பாதுகாக்கும் என்று நினைத்து சென்றுவிட்டார்கள்

சுதந்திர இலங்கையில் பின்னர் நடந்ததை 10,12. வருடங்கள் களித்து பார்த்தபோதுதான் முன்னைய தேசாதிபதி சொல்பரி பிரவுக்கு அறிவு வந்தது.இவ்வாறு நடக்கு மென்று தெரிந்திருந்தால் நாங்கள் சமட்சியாட்சியை வழங்கியிருக்கலாம் என்று எழுத்தாளர் ஒருவருக்கு தெரிவித்திருந்தார்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டது 1958ம்ஆண்டு இனக்கலவரத்தின் காரணமாகத்தான்.

அரச அனுசரணையுடன் நடந்த இந்த இனக்கலவரம் சோல்பரிபிரபுவை வெகுவாகப்பாதித்தது. ஆகவே எமது மக்கள் ஒன்றைப்புரிந்துகொள்ள வேண்டும். வடகிக்க மாகாணங்களில் தமிழ்பேசும் மக்களே பெரும் பான்மையினர்.தொன்று தொட்டு அவர்களே பெரும்பான்மையினர். நாங்கள் நாட்டில் சிறுபான்மையினர் எனக்கருதப்பட்டாலும் வடகிழக்கில் நாமே பெரும்பான்மையினராகும்.அப்பொழுதும் அப்படித்தான் இப்பொழுதும் அப்படித்தான். இந்த நிலையில் தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் வடக்கையும் கிழக்கை பிரித்துவைக்க எத்தனித்தார்கள். வடக்கில் பெரும்பான்மையினரின் குடியேற்றங்களை முடக்கிவிட்டு, சரித்திரத்தை திருப்பி எழுதி,திரித்தெழுதி, முழநாடும் சிங்கள பௌத்தர்களுக்கே சொந்தம் என்றார்கள். முன்னர் ஒரு காலத்தில் அவ்வாறு தான் இருந்தது. பின்னர் வந்தவர்கள் கள்ளத்தனமாக குடியேறி விட்டார்கள் என்றெல்லாம்கதை சொன்னார்கள். அவ்வாறு சில சிங்கள மக்கள் அந்தக்கதைகளை நம்பி வந்துள்ளார்கள். இன்றும் நம்புகின்றார்கள். இந்த நிலமை தொடர்ந்தால் வடகிழக்கில் தமிழ்பேசும் மக்கள் பெரும்பான்மையினராக ஆக்கப்பட்டு விடுவார்கள். ஆகவே வடக்கையும் கிழக்கையும் இணைக்ககூடாது என்று பெரும்பான்மையினர் கூறி வந்தற்கு அந்தக்காரணங்கள் இருந்தன.ஆனால் எமத தமிழ் பேசும் அரசியல்வாதிகளான தத்துக்குட்டிகள் கூறுவதற்கு என்ன காரணம் இருக்கிறது. ? இந்த அரசியல் தலைவர்கள் வருங்காலம் எப்படி இருக்குமென்று அவர்கள் சிந்திப்பதில்லை. எனவே வடகிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டியது என்பது ஒரு சர்ச்சைக்குரிய விடயமல்ல. இந்தமண்ணில் வாழுகின்ற தமிழ் மக்களும் முஸ்லீம் மக்களும் இணைந்து பேசி எடுக்கப்பட வேண்டிய விடயமாகும் எமது எதிர் கால சந்ததியின் நன்மைகருதி அவஎனவும் வர்களின் எதிர் காலத்தை நாம் அடகு வைக்கப்படாது.எனவும் முதலமைச்சர் வலியுறுத்தினார்.