மட்டக்களப்பு செங்கலடி புனித நிக்கொலஸ் தேவாலயத்தின் இரத்த தான முகாம்

0
329

மட்டக்களப்பு செங்கலடி புனித நிக்கொலஸ் தேவாலயத்தின் ஏற்பாட்டில் இரத்த தான முகாம் இன்று ஞாயிற்றுக்கிழமை (18) தேவாலய மண்டபத்தில் நடைபெற்றது.

இரத்த தானம் செய்வோம் உயிரைக் காப்போம் எனும் கருப் பொருளில் நடைபெற்ற இரத்த தான முகாமில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவினர் நேரடியாக வருகைதந்து இரத்தம் பெற்றுக் கொண்டனர்.

அருட்தந்தை ஞா.மகிமைதாஸ் தலைமையில் நடைபெற்ற இரத்தாதான முகாமில் மாவட்டத்தின் பல பாகங்களிலிருந்தும் நுற்றுக்கணக்கானோர் ஆர்வத்துடன் வருகைதந்து இரத்தம் வழங்கினர்.