கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள்

0
1326

2017 ஆம் ஆண்டிற்கான கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 28 ஆம் திகதி வௌியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சை பெறுபேறுகள் அடங்கிய பட்டியலைத் தயாரிக்கும் நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித குறிப்பிட்டார்.

2017 கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் 6 இலட்சத்து 85 ஆயிரம் பரீட்சார்த்திகள் தோற்றினர்.