நாடு கடத்தப்படுவதற்காக விமானத்தில் ஏற்றப்பட்ட தமிழ்க் குடும்பம்.சில நிமிடங்கள் திக் திக்

0
879

நாடு கடத்தப்படுவதற்காக விமானத்தில் ஏற்றப்பட்ட தமிழ்க் குடும்பம்,  விமானம் கிளம்புவதற்கு சில நிமிடங்கள் முன்னதாக மீண்டும் விமானத்திலிருந்து இறக்கப்பட்டுள்ளது. சட்ட நடவடிக்கைகள் காரணமாகவே நடேசலிங்கம், பிரியா தம்பதியினர் மற்றும் ஆஸ்திரேலியாவில் பிறந்த அவர்களின் 2 வயது மற்றும் 9 மாதக் குழந்தைகள் நாடுகத்தப்படுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

கைக்கு விலங்கிடப்பட்டு மெல்பேர்ன் விமானநிலையத்திலிருந்து பேர்த் கொண்டுசெல்லப்பட்டு அந்த இலங்கைத்தமிழ் குடும்பம் இன்றுமாலை பேர்த் சர்வதேச விமானநிலையத்திலிருந்து நாடுகடத்தப்படவிருந்த நிலையிலேயே அந்நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

QLD  மாநிலத்தில் அவர்கள் வாழ்ந்த Biloela வில் இன்று மாலை 5:30மணிக்கு அக்குடும்பத்துக்காக பிரார்த்தனை நடைபெற்றது. அத்துடன் அவர்களை மீண்டும் அங்கு கொண்டுவந்து குடியமர்த்தக் கோரி சுமார் 60,000 கையொப்பங்களும் சேகரிக்கப்பட்டிருந்தன.