ஆட்சியமைப்பது தொடர்பில் த.தே.கூட்டமைப்பு மகாசபை சந்திப்பு!

0
303
காரைதீவு பிரதேசசபையின் ஆட்சியமைப்பது தொடர்பாக முதற்கட்டமாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்கும் மகாசபையின் சுயேச்சை அணியிருக்கும் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
த.தே.கூட்டமைப்பு சார்பில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி கி.துரைராஜசிங்கம் மற்றும் காரைதீவு மகாசபையின் பிரதிநிதிகளும் சுயேச்சைக்குழுத்தலைவரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இச்சந்திப்பு மட்டக்களப்பிலுள்ள இ.த.அ.கட்சிக்காரியாலயத்தில் நடைபெற்றது.
காரைதீவில் நிலையான ஆட்சியமைப்பது சம்பந்தமாக இருதரப்பினரும் ஆக்கபூர்வமாக கருத்துக்களைத் தெரிவித்ததுடன் மற்றுமொரு சந்திப்பிற்கும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
காரைதீவுப்பிரதேசபையில் 11உறுப்பினர்கள் ஒரு தொங்கு உறுப்பினருடன் மொத்தமாக 12உறுப்பினர்களுள்ளனர். இங்கு ஆட்சியமைப்பதற்கு குறைந்தபட்சம் 7உறுப்பினர்கள் தேவை..
இச்சபைக்கு நடந்த தேர்தலில் 4உறுப்பினர்களை த.தே.கூட்டமைப்பு பெற்றிருந்தது. தலா 2 உறுப்பினர்களை சுயேச்சை-1அணியும் ஸ்ரீல.சு.கட்சியும் ஸ்ரீல.மு.காவும் பெற்றிருந்தது. சுயேச்சைஅணி-2 ஒரு உறுப்பினரையும் அ.இ.ம.காங்கிரஸ் ஒரு உறுப்பினரையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.