நாங்கள்; ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்

0
418

பொன் சற்சிவானந்தம்
;
“தமிழ்தேசியக்கூட்டமைப்பிற்கு கடந்த தேர்தலில் மக்களால் அளிக்கப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் ஓர் பின்னடைவான நிலை ஏற்பட்டுள்ளது. என்பதனை கட்சியின் செயற்பாட்டாளர்கள் என்ற வகையில் அதனை நாங்கள்; ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்
என கிழக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சரும் தமிழரசுக்கட்சியின் திருகோணமலை மாவட்டத்தலைவருமான சி.தண்டாயுதபாணி குறிப்பிட்டார்.

இன்று கட்சியின் திருகோணமலை அலுவலகத்தில் நடந்த புதிய சுதந்த்pரன் பத்திரிகை வெளியீட்டில் உரையாற்றியபோதே மேற்படி விடயத்தை அவர் குறிப்பிட்டார். இந்நியகழ்வில் தமிழ் கூட்டமைப்பின் கனடாக்கிளைத்தலைவர் குகதாசன்,பாரளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம், உள்ளிட்ட கடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மற்றும் பட்டியலில் நிறுத்தப்பட்ட வேட்பாளர்கள், மற்றும் கட்சி உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.;
இங்கு மேலும் பேசிய
. முன்னாள் அமைச்சர் குறிப்பிடுகையில், திருகோணமலை நகரசபைப்பிரிவில் 72 வீதமான மக்கள் தமிழ் வாக்காளர்கள்.முஸ்லீம்களுமல்ல சிங்கள மக்களும் அல்ல. அதன்படி அளிக்கப்பட்ட வாக்குகளில் 35 வீதமான வாக்குகளே எங்களது கட்சிக்கு கிடைத்தன.
மூதூர் பிரிவிலவும் மிகக்குறைவான வாக்ககளும் வெருகலில் 52 வீதமான வாக்குகளும்தான் கிடைத்தது. வெருகலைப்பொறுத்தவரை முற்றிலும் தமிழ் மக்கள் வாழும் பிரதேசமாகும்.
இவ்வற்றை வைத்து நோக்கையில் மக்களின் வாக்களிப்பு மிகவும் குறைவாகவே கிடைத்துள்ளன. இது எமது கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவு என்பதனை நாம்புரிந்துகொள்ள முடியும்.இதுபற்றி பல இளைஞர்களும் தேர்தல் காலங்களில் ஏம்மைப்பாரத்து கேள்விகளை எழுப்பியது நாம் அனைவரும் அறிவோம்.
இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் மக்களுடன் கீழ்மட்ட தொடர்புகள் போதாது என்ற விடயமும் இங்கு குறிப்பிடப்படும் முக்கிய விடயமாகவுள்ளன.
அதனடிப்படையில் கட்சியின் பின்னடைவு தொடர்பான பல்வேறு விடயங்களை ஆய்வு செய்யும் நடவடிக்கைளை எமது கட்சி பிரதிநிதிகள் மேற்கொண்டு வருகின்றனர்
இந்த பின்னடைவை குறைப்பதற்கும் மக்களுடனான தொடர்பை;ககூடடுவதற்கும் இந்த புதிய சுதந்திரன் பத்திரிகை ஓரு பங்களிப்பை வழங்கமுடியும்.என நான நினைக்கின்றேன். இந்த பத்திரிகையை பொறுத்தவரை இது எமத கட்சியின் ஓர பத்திரிகைiயாக வெளிவந்துள்ளது. இன்று வடக்கு கிழக்கில் பல இடங்களிலும் வெளியிடப்படுகின்றது.
அதன்படி இன்று இங்கும் வெளியிடப்படுகின்றது. தமிழ் நாட்டில் உள்ள பல கட்சிகளை எடுத்துக்கொண்டால். அங்கு ஒவ்வொரு கட்சிக்கும ஓர பத்திரிகை இருப்பதனை நாம் காணமுடியும். அந்த வகையில் முன்னர் 1970 களில் இந்த சுதந்திரன் பத்திரிகை கட்சியின் ஏடாக வெளிவந்த வண்ணமிருந்தன. இது சிறந்த பத்திரிகைiயாக கூட மக்களால் பார்க்கப்பட்டது. பின்னடிட்ட காலத்தில் இது இல்லாமல் போனது . தற்போது இதன் அவசியம் கருதி இதனை புதிய சுதநத்திரன் என்ற பெயருடன் வெளியிடுகின்றோம்.
இதற்காக பல முயற்சிகளை எடுத்தவர்களில் எமது கனடாக்கிளையின் தலைவர் குகதாசனும் மக்கியமானவராகும். அவர் இந்த விடயத்தில் உள்ள நிலமைகளை எடுத்துரைப்பார். எது எப்படி யிருந்தாலும் எதிர் காலத்தில் எமது கட்சியின் பின்னடைவை நீக்க குறைக்க இந்த பத்திரிகையும் எமக்கு உதவியாக இருக்கும் என நான் கருதுகின்றேன். எனவும் சுட்டிக்காட்டினார்.