திருகோணமலையில் புதிய சுதந்திரன் வெளியீடு –

0
426
இலங்கை தமிழரசு கட்சியின் உத்தியோக பூர்வ பத்திரிகையான புதிய சுதந்திரன் பத்திரிகை இன்று (14) புதன்கிழமை வடக்கு கிழக்கு உட்பட பல்வேறு இடங்களில் காலை 10 மணி என்ற சுப நேரத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
அதன் திருகோணமலை மாவட்டத்திற்கான நிகழ்வு திருகோணமலை மின்சாரநிலைய வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசு கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் மாவட்டக்கிளைத் தலைவர் சி.தண்டாயுதபாணி தலைமையில் இடம் பெற்றது.
பத்திரிகையின் முதல் பிரதியினை நாடாளுமன்ற உறுப்பினர். கு.துரைரெட்ணசிங்கம் அவர்களுக்கு சி.தண்டாயுதபாணிகளால் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கனடா நாட்டின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் குகதாசன் மற்றும் இம் முறை உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சின் மூத்த உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்
உரையாற்றிய கனடா நாட்டின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் குகதாசன் அவர்கள் இப்பத்திரிகை பல்வேறு பொருளாதார சிக்கல்களுக்கு மத்தியில் வெளியிடப்பட்டுள்ளது.அதனை தொடர்ந்து கொண்டு நடத்தும் பொறுப்பு எமது கட்சியின் தொண்டர்களின் கையில் உள்ளது.எனவே இந்த பத்திகையை எமது மக்களின் கைகளில் சென்றடைய வைத்து எமது கட்சியின் செயற்பாடுகள் தொடர்பாக மக்களை தெளிவு படுத்த இப்பத்திரிகையை பூரணமாக பயன்படுத்த வேண்டும். இம்மாதம் மாதாந்தம் இரண்டு வெளியீடுகளும் அதனைத் தொடர்ந்து வரும் மாதங்களில் ஒவ்வொறு வாரத்தின் வெள்ளிக்கிழமைகளிலும் மாலை வாசகர்களுக்கு கிடைக்க கூடியதாக அமையும் என அவர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் எமது பத்திரிகை எமது தலைவர்களின்
கருத்துக்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதுடன் மக்கள் விரும்பி படிக்கக் கூடிய பல்சுவை இதழாகவும் இருக்கும் மேலும் பத்திரிகை தர்மத்தை கடைப்பிடித்து மக்களுக்கு உண்மையான செய்தியை வழங்கும் பத்திரிகையாகவும் இருக்கும்.தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஐயா அவர்கள் முழு நேரமும் எமது கட்சிக்காகவும் மக்களுக்காகவும் தன்னை அற்பனித்து வருகின்றார்.அவர் எமது மக்களுக்கு நிரந்தரமான தீர்வு ஒன்றுக்காகவே ஓயாது உழைத்து வருகின்றார்.எனவே எமது கட்சியின் செயற்பாடுகளை அணைவரும் பகிர்ந்து கொள்ள முன்வர வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்.க.துரைரெட்ணசிங்கம் தெரிவித்தார்.