சமூக ஊடகங்கள் மீதான தடை எதிர்வரும் வெள்ளிக்கிழமை நீக்கப்படக்கூடும்

0
359

சமூக ஊடகங்கள் மீதான தடை எதிர்வரும் வெள்ளிக்கிழமை அளவில் நீக்கப்படக்கூடும் என்று தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இது குறித்து மேலும் தெரிவிக்கையில் சமூக ஊடக பிரதிநிதிகளுடன் எதிர்வரும் வியாழக்கிழமை பேச்சுவார்த்தை நடைபெறும். சமூக நலனுக்கு ஏற்ற வகையிலான ஊடக அபிவிருத்தி கொள்கையொன்றை வலுப்படுத்த வேண்டுமென்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய பாதுகாப்பையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்றும அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.