பௌத்­தர்கள், முஸ்­லிம்­க­ளிடம் மன்­னிப்பு கேட்கத் தேவையில்லை – லக்ஷ்மன் கிரி­யெல்ல கருத்தை, வாபஸ்பெற வேண்டும்

0
500
முஸ்­லிம்­க­ளிடம் பௌத்­தர்கள் மன்­னிப்பு கோர­வேண்டும் என அமைச்சர் லக் ஷ்மன் கிரி­யெல்ல தெரி­வித்த கருத்தை உட­ன­டி­யாக வாபஸ் பெற­வேண்டும் எனவும் அவர் பௌத்­தர்­க­ளிடம் மன்­னிப்பு கோர­வேண்டும் எனவும் ஓமல்பே சோபித தேரர் தெரி­வித்­துள்ளார். அவர் வெளி­யிட்­டுள்ள அறிக்கை ஒன்­றி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.

அண்­மையில் திகன மற்றும் அதனை சூழ­வுள்ள பிர­தே­சங்­களில் முன்­னெ­டுக்­கப்­பட்ட செயற்­பா­டுகள் தொடர்பில் நாடா­ளு­மன்றில் கருத்துத் தெரி­விக்­கும்­போது, அமைச்சர் லக் ஷ்மன் கிரி­யெல்ல, பௌத்­தர்கள் முஸ்­லிம்­க­ளிடம் மன்­னிப்பு கோர­வேண்டும் என கூறி­யி­ருந்தார்.
முன்­கோ­பத்­தினைக் கொண்டு குழு­வாக இணைந்து குழப்­பத்­தை­வி­ளைக்க முயல்­ப­வர்­களால் மேற்­கொள்­ளப்­படும் இத்­த­கைய பயங்­கர­வாத செயற்­பா­டுகள் பௌத்­தர்­களால் ஒழுங்­க­மைக்­கப்­பட்­ட­தல்ல. இவ்­வா­றான செயற்­பா­டு­க­ளுக்கு முழு பௌத்த சமூ­கத்­தையும் குற்­றஞ்­சாட்­டு­வது பெருங்­குற்­ற­மாகும்.
இது இந்­நாட்டு மக்­களை மத்­தி­ர­மல்­லாது வெளி­நாட்­டி­லுள்ள மக்­க­ளையும் பிழை­யான வழியில் இட்­டுச்­செல்­லக்­கூ­டிய காரணி.
இதனால் பாரிய சம்­ப­வங்கள் ஏற்­ப­டக்­கூடும். அதனால் அமைச்சர் லக் ஷ்மன் கிரி­யெல்ல கண்­மூ­டித்­த­ன­மாக மேற்­கொண்ட குற்­றச்­சாட்­டினை உட­ன­டி­யாக வாபஸ் பெற­வேண்டும் என்றும், பௌத்தர் களிடம் மன்னிப்பு கோரவேண்டும் என்றும் இலங்கை ராமஞ்ஞ மகா நிகாயவின் பேச்சாளர் ஓமல்பே சோபித தேரர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.(JM)