திருகோணமலை மாவட்டத்தில் நடந்த இருவேறு விபத்துக்களில் மூவர் பலியாகியுள்ளனர்.

0
371

பொன் சற்சிவானந்தம்

திருகோணமலை மாவட்டத்தில் இன்று(12.3) நடந்த இருவேறு விபத்துக்களில் மூவர் பலியாகியுள்ளனர்.

தம்பலகமம் திருகோணமலை பிரதான வீதியில் ஆதிகோணேநாதர் கோயிலடிக்கு அண்மையில் இன்று காலை நடந்த ரிப்பர் ரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு இளைஞர்கள் பலியாகினர்.

இவர்கள் இருவரும் 20,21 வயது மதிக்கத்தக்க இளைஞர் கள் என ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் அறிந்து ஸ்தலத்திற்கு வருகைதந்ததம்பலகமம்பொலிசார்

சம்பந்தப்பட்ட ரிப்பர் சாரதியை கைது செய்து மேலதிக விசாரணைகளைமேற்கொண்டு வருகின்றனர். இவ்விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயெ பலியானார் தம்பலகமம் வைத்தியமனைக்குகொண்டு செல்கையில் மற்றயவர் பலியானார்இவ்வாறு உயிரிழந்தவர்கள் வெள்ளைமணல் பிரிவைச்சார்ந்த முகம்மது சித்திக் பாகீம் வயது21முகம்மது நளம் நவீத் இலாகி(வயது20அடையாளம் காணப்பட்டுள்ளது

இதேபோன்று மூதூரபிரதேசத்தில் உள்ள ; மேன்கமம் பகுதியில் நடந்த விபத்தொன்றில் மின்சாரம்தாக்கிய நிலையில் புகைப்பட பிடிப்பாளர் ஒருவர் இன்று நண்பல் 1.40 மணியளவில் பலியாகியுள்ளார்.

இவர் மேன்கமத்தில் புகைப்பிடிப்பு தொழிலைமேற்கொண்டு வந்த நாகமணி சுதாகரன்(40) என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேன்கமம் பகுதியில் உள்ள வீடொன்றில் நடந்த நிகழ்வொன்றில் படமெடுப்பதற்காக மின்சாரத்தை தொடர்பு படுத்தியபோது மின்ஒழுக்குகாரணமாக மின்தாக்கியுள்ளது.

இந்நிலையில் மின்சாரம் தாக்கியதால் இவர் இறந்துள்ளார். இதனையடுத்து இவரது உடல் தோப்பூர்வைத்தியசாலைக்குகொண்டு வரப்பட்டு விசாரணைகட்காக வைக்கப்பட்டிருந்தது. மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.