துறைநீலாவணையில் வைத்தியர் தங்குமிடவசதியறை ஒருபகுதி இத்துப்போய் இடிந்து விழுந்துள்ளது.

0
617

(-க.விஜயரெத்தினம்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணையில் உள்ள வைத்தியசாலையின் வைத்தியர் தங்குமிட வைத்தியர்யறை (ஒருபகுதி)சனிக்கிழமை (10.3.2018) இடிந்து வீழ்ந்துள்ளது.துறைநீலாவணை அரசினர் வைத்தியசாலையின் வைத்தியராக கடமையாற்றுவதற்கு நியமிக்கப்படும் வைத்தியர் தங்கிநின்று கடமையாற்றுவதற்கே இக்கட்டிடம் 1983.8.30 திகயன்று கட்டப்பட்டதாகும்.அப்போதய பிரதேச அமைச்சர் செல்லையா இராசதுரை அமைச்சரின் சிபாரிசின் மூலம் கட்டிமுடிக்கப்பட்டதாகும்.துறைநீலாவணைக் கிராமம் எதுவித போக்குவரத்து வசதியற்ற காரணத்தினால் துறைநீலாவணையில் அரசினர் வைத்தியசாலை கட்டப்பட்டதாகும்.இவ்வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியருக்காக கட்டப்பட்ட வைத்தியர் தங்குமிடஅறை 1984 ஆண்டு முதல்1989 வரையும் வைத்தியர் தங்கியிருந்து இவ்வைத்தியசாலையில் வைத்தியர் கடமையாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அதன் பின்னர்  துறைநீலாவணை வைத்தியசாலையில் கடமையாற்றுவதற்கு நியமிக்கப்படும் வைத்தியர்கள் தங்கிநின்று கடமையாற்றவில்லை.குறுகிய காலத்திற்கு பின்பு நாட்டில் நிலவிய அசாதாரண நிலைமை காரணமாக இவ்வைத்தியர் தங்குமிடயறை வைத்தியர் பயன்படுத்தப்படவில்லை.இதனால் இவ்வைத்தியர் தங்குமிடயறை விலங்குகள்,பறவைகளின் சரணாலயமாக மாறியுள்ளது.இக்கட்டிடத்தின் கூரைப்பகுதி,தங்குமிடயறைகள்,மலசலக்கூடம்,வேலிகள், தூர்ந்துபோய் காட்சியளிக்கின்றது.இதுசம்பந்தமாக கிழக்கு மாகாண ஆளுநர், சுகாதார அமைச்சின் செயலாளர்,சுகாதார வைத்திய அதிகாரிகள் இதனை பார்வையிட்டு புதிய கட்டிடம் ஒன்றை இவ்வைத்தியசாலை சம்பந்தமாக துரித நடவடிக்கை எடுக்கவேண்டும்.தற்போது மறமறப்பு சத்தத்துடன் ஒருபகுதி உடைந்து வீழ்ந்துள்ளது.