சக மதங்களையும் மதிக்கும் பண்பை இளம்சமூதாயத்திற்கு ஊட்டவேண்டியுள்ளது.

0
238

தன்னுடைய மதத்தை எவ்வாறு போற்றி நேசிக்கின்றார்களோ அவ்வாறே ஏனைய சக மதங்களையும் மதிக்கும் பண்பை அறநெறி மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்.

அவ்வாறான சூழல் ஏற்படுத்தப்படும் போதுதான் எதிர்காலத்தில் ஒரு சுமூகமான வாழ்வை இளம் சமூதாயம் எட்டமுடியும் என திருகோணமலை மாவட்ட மேலதிக செயலாளர் க.அருந்தவராஜா தெரிவித்தார்.

நேற்று மாலை இந்து சமய கலாசார அலுவலக்கள் திணைக்களமும் திருகோணமலை மாவட்ட செயலகமும் இணைந்து அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவை நடாத்தியது.

2017ம்ஆண்டு அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கு தேசியளவில் நடாத்தப்பட்ட ஆக்கத்திறன் போட்டிகளில் மாவட்ட மட்டத்தில் சாதனைபடைத்த அறநெறிப்பாடசாலைகளுக்கும், மாணவர்களுக்கும் சான்றிதழ்களும் பரிசிரல் களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இங்கு தலமைதாங்கிய மேலதிக மாவட்ட செயலாளர் பேசுகின்றபோதே மேற்படி கோரிக்கையை விடுத்தார்.

அவர்மேலும் குறிப்பிடுகையில்,

இங்கு ஆரம்ப நிகழ்வில் உணர்வுபூர்வமாக தேவாரபாராயணம் செய்த மாணவிகளின் பக்தியைப்பார்க்கின்றபோது மிகவும் சந்தோசமாகவுள்ளது. எங்களுடைய காலத்தில் இவ்வாறான சந்தர்பங்கள் எமது இளம் பராயத்தில் கிட்டவில்லை. எங்களுடைய வாழ்நாள் காலம் ஒரு சிக்கல் நிறைந்த காலப்பகுதியாக அமைந்திருந்தது.யுத்தம் காரணமாக ஒழுங்கான கல்வி வசதி வாய்ப்புக்கள், இந்நிலமைகள் இருக்க வில்லை.

இந்து சமயமானது பல்வேறு நூற்றாண்டுகளில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வந்துள்ளது. அதனில் இருந்தும் தப்பிழைத்து வந்திருக்கின்ற ஒரு சமயமாகவும் உள்ளது.அந்தவகையில் இந்து சமயம் எதிர்காலத்திலும் தன்னைப்பாதுகாத்துக்கொள்ளும் என்ற நம்பிக்கையில நாம் எல்லோரும் இணைந்து செயற்படுவோம்.

தற்காலத்தில் இந்து சமயத்திற்கு ஏற்பட்டிருக்கின்ற பின்னடைவுகள் பற்றி பலருக்கும் ஆதங்ககங்கள் உள்ளன.அதனை எமது உதவி மாவட்ட செயலார் ந.பிரதீபனும் வெளிப்படுத்தினார். அவரது ஆதங்கம் மட்டுமல்ல இது பொது வாக எம்மவர்கள் மத்தியில் உள்ள நிலமைதான்.

ஆகவே இந்த மாணவிகள் இவ்வாறு பக்திசிரத்தையுடன் பயில்வதற்கான சந்தர்பம் அறநெறிப்பாடசாலையூடாக கிட்டியுள்ளது. இந்நிலைமை அவர்களது சந்ததிக்கும் கொண்டு செல்லப்படும் என நான் நினைக்கின்றேன்.எங்கே ஆரம்பம் நன்றாக உள்ளதோ அதனடிப்படையில் அந்த பிள்ளையினுடைய வாழ்நாழ் முழுவதும் அமையும் என்பது உண்மையாகும். அதனடிப்படையில் இந்த மாணவர்களின் சமய ஈடுபாடு இருக்கும்.இந்த ஈடுபாடு தனது எதர்கால சந்திததிக்கும் கொண்டு செல்லப்படும்.பலருக்கு இவ்வாறான சந்தர்பங்கள் கடந்த காலங்களில் கிட்ட வில்லை.

தற்காலத்தில் தொழில் நுட்பம் வளர்ந்த காலமாக இருக்கிறது .இந்தக்காலத்தில் பிள்ளைகளின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் தராதரத்தில் பெற்றார் இல்லாத சூழலம் தற்காலத்தில் நிகழ்கின்றது.இதுவும் ஒரு சிக்கலான காலமாகவே உள்ளது.

ஆகவே இந்நிலையில் இந்த சின்னவயதில் இருந்தே நல்ல படிப்பினையை,சமய வழிபாட்டுமுறமைகளை, ஊட்டி மாணவர்களை வழிநடத்த வேண்டிய கடப்பாடு பெற்றாருக்கும்  அறநெறிப்பாடசாலையை நடாத்தும் அமைப்புக்களுக்கும,அதனை வழிநடாத்தும் திணைக்களத்திற்கும் உள்ளது.

அந்தவகையில் இந்த அறநெறிப்பாடசாலைகளூடாக, முக்கியமாக உங்களுடைய மதங்களை எவ்வாறு மதிக்கின்றீர்களோ? அதேபோன்று ஏனைய சக மதங்களையும் மதிக்கும் பண்பை இளம்சமூதாயத்திற்கு ஊட்டவேண்டியுள்ளது.

அதனையே தற்காலத்தில் ஏற்பட்டுள்ள நாட்டின் நிலமைகள் எமக்குணர்த்திநிற்கிறது.எனவும் சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில் ஆசியுரையை திருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலய ஆதினகர்த்த சோ.இரவிச்சந்திரக்குருக்கள் வழங்க வரவேற்புரையை உதவி மாட்ட செயலாளர் ந.பிரதீபன் வழங்கியிருந்தார். இங்கு கிழக்கு மாகாண பண்பாட்டல்வல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர். திருமதி.இரவீந்திரன்,இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர்(நிர்வாகம்) இரா.அர்ஜன், திருகோணமலை வலயக்கல்விப்பணிப்பாளர் ந.விஜேந்திரன், தம்பலகமம் பிரதேச செயலாளர் திருமதி .ஸ்ரீபதி கலாசார உத்தியோகத்தரகள், உள்ளிட்ட பல பாடசாலை அதிபர்கள், அறநெறிப்பாடசாலை அதிபர்கள்ஆசிரியர்கள் மாணவர்கள் என அதிகளவிலானொர்கலந்துகொண்டனர்.