மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் ஆங்கில நாடக விழா.

0
474

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மாணவர்களின் ஆங்கில நாடக விழா சனி மற்றும் ஞாயிறு ஆகிய கிழமைகளில் குறிஞ்சாமுனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.

பிராந்திய ஆங்கில ஆதரவு மையமும், மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்வி அலுவலகமும் இணைந்து, மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய வரலாற்றில் முதன்முறையாக இந்நாடக விழாவினை ஆற்றுகை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில், வலய அதிகாரிகளும், அரசசார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இரண்டு நாட்கள் நடைபெற்ற குறித்த நாடக விழாவில், பல்வேறு தலைப்புக்களில் சிறுவர்கள் பல நாடகங்களை ஆற்றுகைசெய்தனர். இதில் பெற்றோர்களும் ஆர்வமாக கலந்து கொண்டு பார்வையிட்டதையும், உதவிகளை செய்தமையையும் காணமுடிந்தது.