இறைவன் தந்த இந்த இரத்தத்தை இன்னுமொருவர் உயிர்வாழ நாங்கள் கொடுக்கின்றோம்.

0
203

(மட்டு ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை)

இந்த சமுக அக்கறை ஆண்டிலே நாங்கள் மற்றவர் மேல் அக்கறை கொள்ள வேண்டும். ஆண்டவர் இயேசு கிறிஸ்து எமக்காக தன் இரத்தத்தைச் சிந்தினார். அதனை நாங்கள் நினைவு கூர்ந்து எமக்கு இறைவன் தந்த இந்த இரத்தத்தை இன்னுமொருவர் உயிர்வாழ நாங்கள் கொடுக்கின்றோம் என மட்டக்களப்பு அம்பாறை மறைமாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை தெரிவித்தார்.

மட்டக்களப்பு கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்றைய மேற்கொள்ளப்பட்ட இரத்ததான நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்தத் தவக்காலத்தில் கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தினால் மேற்கொள்ளப்பட்ட இந்த இரத்ததான நிகழ்வினை எண்ணி நான் மிக மகிழ்கின்றேன். இந்தத் தவக்காலத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து எமக்காக தன் இரத்தத்தைச் சிந்தினார், உயிர் நீத்தார். அதனை நாங்கள் நினைவு கூர்ந்து அவரைப் போன்று நாங்கள் எங்களுடைய இரத்தத்தைத் தானம் செய்ய வேண்டும். எமது உயிரை மற்றவர்களுக்காகப் பகிர்ந்து கொள்ள வேண்டும். என்கின்ற இயேசு கிறிஸ்துவின் கோட்பாட்டின் படி நாங்கள் எங்களால் இயன்ற இவ்வாறான உதவியை, எமக்கு இறைவன் தந்த இந்த இரத்தத்தை இன்னுமொருவர் உயிர்வாழ நாங்கள் கொடுக்கின்றோம். அந்தவகையில் இன்று மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை மிகச் சந்தோசமளிக்கின்றது.

அத்தோடு எமது இந்த 2018 சமுக அக்கறை ஆண்டிலே நாங்கள் மற்றவர் மேல் அக்கறை கொள்ள வேண்டும். இந்த நற்செய்தியை நாங்கள் இந்த விதத்திலே வெளிப்படுத்தி எங்களையும் மாற்றி மற்றவர்களுக்கு உதவி செய்து அக்கறை கொண்டு வாழ இது ஒரு வாய்ப்பாக இருக்கின்றது. பலரும் இது போன்ற செயற்பாடுகளில் முன்வந்து ஈடுபட வேண்டும் என்று தெரிவித்தார்.