தமிழ் மக்கள் மிகவும் எச்சரிக்கையாகவும் பொறுமையாக இருக்குமாறு வேண்டுகோள்

0
319

கண்டி திகன பிரதேசத்தில் இடம்பெற்ற அசம்பாவிதத்தை தொடர்ந்து கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக வன்முறைகளை திசைதிருப்பி, நாட்டில் ஸ்திர தன்மையற்ற நிலையை எற்படுத்த சில குழுக்கள் முயன்ற வருவதாக இந்து சம்மேளனத்தின் தலைவர் அருன்காந்த் நாராயணசாமி தெரிவித்தார்.

எனவே, தமிழ் மக்கள் மிகவும் எச்சரிக்கையாகவும் பொறுமையாக இருக்குமாறு இந்து சம்மேளனம் மக்களை கேட்டுக்கொள்வதாக சம்மேளனத்தின் தலைவர் அருன்காநந் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டில் தற்போது இடம்பெற்று வரும் சம்பவங்களினால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழுநிலையில் தமிழ் மக்களின் பாதுகாப்பு தொடர்பாக ஊடக அறிக்கை ஒன்றை இன்று ( 09) இந்து சம்மேளனம் விடுத்துள்ளது.

கண்டியில் இடம்பெற்றுவரும் அசம்பாவிதத்தை அடுத்து மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் கடந்த 2 தினங்களாக சில இடங்களில் கல்வீச்சு மற்றும் ரயர் எரிப்பு சம்பவங்களும் இடம்பெற்றது. இது தொடர்பாக எமது பிரதி நிதிகள் எமது அமைப்பிடம் முறையிட்டனர்.

கிழக்கு மாகாணத்தை பொறுத்த மட்டில் பிரதான பாதைகளில் மட்டுமே முப்படையினரும் பொலிசாரும் பாதுகாப்பை வழங்கி வருவதாகவும் ஏனைய உட்புற பாதைகள், கிராமங்களில் பாதுகாப்பற்ற நிலை காணப்படவதாகவும் எமது அமைப்பாளர்கள் சுட்டிக்காட்டினர்.

அதனைத் தொடர்ந்து இது தொடர்பாக பிடிகேடியர், பொலிஸ் திணைக்களம், ஜனாதிபதியின் காரியாலய இணைப்பதிகாரியுடனும் தொடர்பு கொண்டு உட்புற பாதைகள் கிராமங்களில் சந்திகளில் பொலிசாரின் ரோந்து பணிகளை செய்யுமாறு வேண்டியிருந்தேன். அதன்படி அவர்கள் சம்மந்தபட்ட இடங்களில் அந்த ரோந்து நடவடிக்கைகளில் சிறப்பாக ஈடுபட்டு பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளனர்.

எமது வழிகாட்டலில் இளைஞர்கள் பொறுப்புடனும் பொறுமையுடனும் நடந்து கொண்டுள்ளனர். எனவே எதிர்வரும் நாட்களில் தமிழ் மக்கள் எச்சரிக்கையாகவும் பொறுமையாக இருக்குமாறு கேட்டுக்கொள்வதோடு, பொலிஸ் மா அதிபர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், ஜனாதிபதி, பிரதமர் அலுவலக அதிகாரிகளுக்க நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

நன்றி  சரவணன்(AD)