மாற்றுவழிகளை பயன்படுத்தி சமூக வலைத்தளங்களை பாவிப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை

0
392

பேஸ்புக், வட்ஸப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடை இன்றும் அமுல்படுத்தப்படும் என தொலைத்தொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு இந்த தடை நீடிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

அதன்படி பேஸ்புக், வட்ஸப், இமோ, உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு இன்றும் உபயோகிக்க முடியாத நிலை காணப்படும்.

இதேவேளை மாற்றுவழிகளை பயன்படுத்தி குறித்த வலைத்தளங்களை பாவிப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு மாற்றுவழிகளை பயன்படுத்துபவர்களுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சமூக வலைத்தளங்களூடாக இனவாத கத்துக்களை பரப்புபவர்கள் மற்றும் பரிமாறுபவர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு குற்றத் தடுப்பு பிரிவினரின் ஆதரவு பெற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது(DC)