இந்த வருடம் முடிவுக்குள் பெண்கள் தலமைதாங்கும் குடும்பங்களை இனம் கண்டு அவர்கள் சகலருக்கும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்

0
318

“இந்த வருடம் முடிவுக்குள் பெண்கள் தலமைதாங்கும் குடும்பங்களை இனம் கண்டு அவர்கள் சகலருக்கும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் .

இதனை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க பிரதேச செயலாளர் முயற்சிக்க வேண்டும் ;என நான் பணிப்புரை விடுத்துள்ளேன்.என திருகோணமலை மாவட்ட செயலாளர் என்.ஏ.ஏ.புஸ்பகுமாரதெரிவித்தார்.

இன்று காலை மாவட்ட செயலகத்தில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குளுவின் பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற சர்வதேச பெண்கள் தின நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு பேசும் பேதே மேற்படி விடயத்தை மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.

ஆணைக்குளுவின் பிராந்திய இணைப்பாளர் செல்வி ஜி.குகதாஸன் தலமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்டத்தில் செயல்படும் மனித உரிமைகள் சார் பொது அமைப்பு பிரதிநிதிகள், கிராம மட்ட பெண்கள் அமைப்பு பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் கடந்த வருடம் ஆணைக்குளுவால் எடுக்கப்பட்ட பெண்கள்சார்பான பொருளியில் ரீதியாக அரசு முன்னெடுக்க வேண்டியசில விடயங்கள்சார்பான பரிந்துரை அறிக்கை ஒன்றும் மாவட்ட செயலாளருக்கு கையளிக்கப்பட்டன.

இங்கு மேலும் பேசிய மாவட்ட செயலாளர், கடந்த 30 ஆண்டுகள் நடந்த யுத்தம் காரணமாக ஆயிரக்கணக்கான பெண்கள் தமது குடும்பத்தலைவர்களை இழந்துள்ளனர். அவ்வாறான பெண்கள் தமது குடும்பத்தை வழிநடத்துவதிலும் வருமானத்தை தேடுவதிலும் பல்வேறு பிரச்சனைகளை எதிர் நோக்கி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த வருடம் முடிவதற்குள் அவ்வாறான பெண்கள் தலமைதாங்கும் குடும்பங்களின் அடிப்படைத்தேவைகளை இனம் கண்டு அவ்வாறானவர்களுடன் அதிகாரிகள் நெருக்கமாகப்பேசி அவற்றைத்தீர்க்கவேண்டும். குறிப்பாக மலசலகூடம், வீட்டு வசதி வாழ்வாதாரம் போன்ற விடயங்களை நிறைவேற்ற வேண்டும் என நான் மாவட்டக்கூட்டங்களில் வலியுறுத்தியுள்ளேன்.

எமது திருகோணமலை மாவட்டத்தில் 51 வீதமான பெண்கள் வாழ்கிறார்கள். ஆண்களைப்பொறுத்தவரை 49 வீதமாக வுள்ளனர். இவ்வாறான நிலையில் பெண்கள் அபிவிருத்தி நடவடிக்கைளில் பங்காற்றும் நிலமை படிப்படியாக ஏற்பட்டு வருகிறது. முன்னர் இவ்வாறான சந்தர்பம் மிகவும் குறைவாகவே காணப்பட்டது.

முன்னர் அரசியல் தொடக்கம் நிர்வாகம் வரை மிகக்குறைவானபெண்களே இருந்தனர். இந்நிலையில் தற்காலத்தில் இவ்வாறான தீர்மானம் எடுக்கும் நிலைக்கு பெண்கள் வந்தவண்ணமுள்ளனர். நியுசிலாந்து போன்ற நாடுகளில் 50இக்கு 50 என்ற நிலையில் பெண்கள் அரசியலிலும் நிர்வாகத்திலும் பங்கெடுக்கின்றனர். எமது நாட்டில் அவ்வாறான நிலமை இல்லை. உலக ரிதியாக உள்ளது போன்று எமது நாட்டிலும் மாற்றம் ஏற்பட வேண்டும்.

சரிக்குசரியான வளமாகவுள்ள பெண்கள் எதிர்காலத்தில், சமமாக மதிக்கப்படும் நிலமை ஏற்படவேண்டும். மறுபுறத்தில் எமது நாட்டில் நடந்த யுத்தம் காரணமாக பல ஆயிரக்கணக்கான பெண்கள் தமது தலமைகளை இழந்து கஸ்ரப்படுகின்றனர். அவர்கள் தமது பிள்ளைகளை வளர்க்கவும் அதற்காக வருமானத்தை ஏற்படுத்தவும் அவர்களே தனிநபராக விருந்து சிரமப்படுகின்றனர்.

அவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டு வரவும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் பிரதேச செயலாளர்கள் நடவடிக்கைஎடுக்க வேண்டும் எனவும் நான் பணிப்புரை விடுத்துள்ளேன். எனுவும்சுட்டிக்காட்டினார்.