கிரான் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானத்தின் பிரேமோற்சவப் பெருவிழாவின் கொடியேற்றத் திருவிழா

0
90

மட்டக்களப்பு கிரான் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானத்தின் பிரேமோற்சவப் பெருவிழாவின் கொடியேற்றத் திருவிழா இன்றைய தினம் பிரதம சிவச்சாரியார் சர்வதேச இந்துமத குருபீடாதிபதி சபரிமலை முதல்வர் ஆன்மீக அருள்ஜோதி ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவச்சாரியர் தலைமையில் இடம்பெற்றது.

ஆலயத்தின் மகோற்சவ காலத்தில் ஒவ்வொரு திருவிழாக்களும் குடிப்பரையைக் கொண்டமைவதுடன் 7ம் திருவிழாவான எதிவர்வரும் 13.03.2018 திங்கள் கிழமை வேட்டைத் திருவிழா வெகு சிறப்பாக ஆலயத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய தினம் ஆரம்பமாகிய பிரமோற்வச பெருவிழாவனது 11 திருவிழாக்களுடன் எதிர்வரும் 17.03.2018 சனிக்கிழமை காலை தீர்த்தோற்வசவத்துடன் இனிதே நிறைவடையவுள்ளது.