ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற சட்டத்தரணிகள் ஈடுபட்டனர்.

0
218

நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையினைக்கண்டித்தும் சட்டத்தை பாரபட்சமின்றி அமுல்படுத்தக்கோரியும் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற சட்டத்தரணிகள் இன்று 07.03.2018 புதன்கிழமை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

நீதிமன்ற நடவடிக்கை நேரத்தில் இந்த சட்டத்தரணிகள் நீதிமன்றக் கட்டடத்தின் முன்பாக அமைதியாக நின்று தமது கண்டனத்தை வெளியிட்டனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. சட்டத்தை பாரபட்சமின்றி அமுல் படுத்தும்போதுதான் இவ்வாறான அசம்பாவித சம்பவங்களைக் கட்டுப்படுத்த முடியுமென தாம் கருதுவதாக சிரேஷ்ட சட்டத்தரணியொருவர் இங்கு கருத்துவெளியிட்டார்.