தென்னமரவாடி கிராமத்தில் தமிழ் விவசாயிகளின் காணிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள அத்துமிறலுக்கெதிராக இரு வழக்குகள்

0
416

திருகோணமலையில் தென்னமரவாடி கிராமத்தில் தமிழ் விவசாயிகளின் காணிகளில் மேற்கொள்ளப்பட்டு ள்ள அத்துமிறலுக்கெதிராக திருகோணமலைமாவட்ட நீதிமன்றில் இருவழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இவ்வழக்குகள் இன்று மாவட்ட நீதிமன்றில் நீதவான் எம்.பி.முகைடீன் முன்நிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது இவ்வழக்கை வரும் 24.04.2018ம்திகதிக்கு ஒத்திவைத்தார்.தென்னமரவாடியைச்சார்ந்த நாகரெத்தினம் சண்முகநாதன்,சிவலிங்கம் சிவலிங்கம் சிவஞானம் ஆகியோர் 3ம் கொலனி சிறிதிஸ்புர என்ற இடத்தில் வசிக்கும் முதியானசலாகே பிரேமரத்தின என்பவருக்கெதிராக தனித்தனியாக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. மேற்படி இருவரது காணிகளையும் ஒருவரே அத்துமீறி செய்கை பணி வருகின்றார்.என்பது வழக்கில் பதிவு செய்யப்பட்டுள்ளன.இவ்வழக்கு நடவடிக்கைளுக்கு சிவில் அமைப்பினர் அனுசரணை வழங்கியுள்ளனர்.

இவ்வழக்கு இன்று மாவட்ட நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே வரும் 24ம்திகதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.கடந்த 1984ம்ஆண்டு குறித்த தென்னமரவாடி மக்கள் முற்றாக யுத்தம் காரணமாக இடம்பெயர்த்திருந்தனர்.

பல ஆண்டு களுக்குப்பின்னர் மக்கள் மீளக்குடியேறிய போதும் தமது பூர்விக காணிகளில் பெரும்பான்மையின விவசாயிகள் அத்துமீறி செய்கை பண்ணி வந்தனர். இது தொடர்பாக பல இடங்களுக்கும் முறையிட்டபோதும் தீர்வுகிடைக்க வில்லை.

பொலிசிலும் முறையிட்டபோதும் அவர்கள் காணியை உறுதி செய்தபோதும் அத்துமீறியவர் காணியை விடுவிக்க மறுத்த நிலையில் இயலாக சூழலில் நீதிமன்றத்தை பாதிக்கப்பட்ட விவசாயிகள் நாடியுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்