மட்டக்களப்பு போதனாவைத்தியசாலை டெங்கு உற்பத்தின் மையமா? Photos

0
832

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வளாகம் குப்பைமேட்டினால் நிரம்பி வழிவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறிப்பிட்ட குப்பைகளினால் டெங்கு பெருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், .வைத்தியசாலை எல்லைக்குள் அமைக்கப்பட்டுவரும் புதியகட்டிடத்தில் வேலை செய்யும் இரு தொழிலாளர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இக்குப்பைகளை அகற்ற  வைத்தியசாலை நிருவாகம் நடவடிக்கை எடுக்காவிட்டால் வைத்தியசாலை விடுதிகளில் தங்கி சிகிச்சைபெறும் நோயாளிகளுக்கும் டெங்கு நோய் ஏற்படும் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.