மட்டக்களப்பு கேந்திரமுக்கியத்துவம் வாயந்த கல்விப் பிரதேசமாகக் கட்டியெழுப்பப்டவேண்டும். கிழக்கு மாகாண ஆளுனர்

0
338

(க. விஜயரெத்தினம்)
ஆசிரியர்கள் அனைவரும் அர்ப்பணிப்புடன் வேலை செய்து, ஒழுக்கமுள்ள மாணவர் சமூகத்தை உருவாக்குவதற்கு திடசங்கற்பம் பூண வேண்டும். ஆசிரியர்கள் ஒழுக்கமுள்ளவர்களாகத் திகழ வேண்டும். அப்போதுதான் கிழக்கு மாகாணத்தை கல்வியில் முன்னேற்ற முடியும் என கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போஹொல்லாகம தெரிவித்தார். மட்டக்களப்பில் ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கான வைபவத்தில் கலந்துகொண்டு தலைமையுரையாற்றுகையின்போது தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று கிழக்கு மாகாணத்திற்கு முக்கியமான நாளாகும். நீண்டகாலமாக பட்டதாரிகளுக்கு தீர்வுகாணப்படாமல் அவர்களின் பிரச்சினையை ஜனாதிபதி அவர்களின் ஆலோசனையின் பெயரில் அவர்களுக்கு நியமனத்தை வழங்கி தீர்வு பெற்றுக்கொடுக்கும் நாளாகும். பட்டதாரிகளின் பிரச்சினை பாரிய பிரச்சினைகளுக்கு மத்தியில் தீர்வு காணப்படுகின்றது. வேலையில்லாப் பிரச்சினை இன்று தீர்வுகாணப்படுகின்றது. 300-க்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு விஞ்ஞான ஆய்வுகூடங்கள் பெற்றுக்கொடுக்கப்படுகின்றது. 30 வருடகால யுத்தத்தினால் சமாதானம் கண்ணுக்கு எட்டா இடத்தில் காணப்பட்டது. நல்லாட்சி அரசாங்கம் சமாதானத்தை கட்யெழுப்புவதில் செயற்பட்டுக்கொண்டிருகின்றது. 1100 பாடசாலைகளுக்கு ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது. 345000 மாணவர்கள் பாடசாலையில் கல்வி கற்கின்றார்கள். கிழக்கு மாகாணத்தில் 37000 பேர் சேiவாயற்றி வருகின்றார்கள். வருடா வருடம் இவர்களின் வேதனத்திற்கு 17 மில்லியன் ரூபா கொடுப்பனவு தேவைப்படுகின்றது. 21000 பேர் பாடசாலைகளில் கடமையாற்றி வருகின்றனர். ஆயினும் 1100 பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது. இருந்தும் 2017-ம் ஆண்டு கிழக்கு மாகாணத்தின் கல்விப் பெறுபேறு வீழ்ச்சி கண்டுள்ளது. இலங்கையின் 9ஆவது இடத்தில் கிழக்கு மாகாணம் காணப்படுகின்றது. இந்நிலைமை மாற்றியமைக்கப்பட வேண்டும். பெப்ரவரி 5ம் திகதி அம்பாறை பொத்துவிலில் வைத்து கிழக்கு மாகாண பட்டதாரிகள் விடயமாக அவர்களுக்கு நிரந்தர தொழில் வழங்கவேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அதற்கு இணைவாக அவரின் ஆலோசனையின் பெயரிலும், இன்று நியமனம் வழங்கப்படுகின்றது.
கடந்த நவம்பர் 26-ம் திகதி ஆங்கில டிப்ளோமாதாரிகள் உட்பட 1370 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டது. இன்னும் எஞ்சியிருப்பது 1900 பட்டதாரிகள் ஆகும். இவர்களுக்கு மூன்று காலப்பகுதிக்குள் கிழக்கு மாகாண சபையில் உள்ள அனைத்துத் திணைக்களங்களிலும் வேலைவாய்ப்பு வழங்கப்படும். அதற்கான நடவடிக்கைகளை எங்களால் மேற்கொள்ளப்படும். பட்டதாரிகளின் கனவை நனவாக்கும் செயற்பாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் கவனமாக இருக்கின்றார். 250 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும்போது 250 மில்லியன் ரூபா தேவைப்படுகின்றது. 1000 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புக்கள் வழங்கும்போது 1000 மில்லியன் ரூபாய தேவைப்படுகின்றது. அதுமட்டுமல்ல ஏனைய கொடுப்பனவுச் செலவுகளும் தேவையாக இருக்கின்றது.
கிழக்குமாகாணத்தைப் பொறுத்தவரையில் கல்வி, சுகாதாரம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டி இருக்கின்றது. 1100 பாடசாலைகளில் 300 தேசிய பாடசாலைகள் காணப்படுகின்றன. 142 வைத்தியசாலைகள் காணப்படுகின்றன. 45 உள்ளுராட்சி மன்றங்களை மாகாணசபை நிதியில் நடத்திக்கொண்டிருக்கின்றோம். கிழக்கின் வளமாக 440 சதுரகிலோமீற்றர் காணப்படுகின்றது. இது ஆறில் ஒன்றாகும். கிழக்கு மாகாணத்தில் பாதைகள் சரியாக அமைக்கப்படவேண்டும். மத்திய அரசும், மாகாணசபையும் இணைந்து இதனை அபிவிருத்தி செய்ய வேண்டும். மட்டக்களப்பு கேந்திரமுக்கியத்துவம் வாயந்த கல்விப் பிரதேசமாகக் கட்டியெழுப்பப்டவேண்டும். இம்மாவட்டத்திலேதான் அதிகமான பொறியியலாளர்கள், வைத்தியர்கள், தொழில்நுட்பவியலாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள் உருவாக்கப்பட வேண்டும். இந்த வெபர் விளையாட்டு மைதானத்தைச் சுற்றி 200 கல்வி நிலையங்கள் காணப்படுகின்றன. 8 வருடங்களுக்கு முன்னாள் கட்டப்பட்ட நூலகம் தூண்களாகக் காணப்படுகின்றது. இதனை நிவர்;த்தி செய்வதற்கு 300 மில்லியன் ரூபா தேவைப்படுகின்றது. இதற்கு ஜனாதிபதி அவர்கள் நிதி ஒதுக்கீடு செய்து தர வேண்டும். கிழக்கு மாகாணத்தில் நாங்கள் பொதுப்படையாகவும், வெளிப்படையாகவும் வேலை செய்துகொண்டு இருக்கின்றோம். மக்களின் யோசனைகள் தேவைகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். இன்று ஆசிரியர் நியமனம் வழங்கப்படுகின்றது. இது அரசியல் இல்லாமலும், அழுத்தங்கள் இல்லாமலும் வழங்கப்படுகின்றது. இதற்குக் காரணம் ஜனாதிபதி அவர்களின் தூய சிந்தனையாகும். நல்லாட்சியைப் பொறுப்பேற்ற பின்பு இவ்வாறான வேலைகளை அவர் கிழக்கிற்கு மேற்கொண்டு வருகின்றார். தவறுகள் ஏற்பட்டால் தீர்த்து வைப்போம். ஆசிரியர் சேவை புரியும் ஆசிரியர்களாகிய நீங்கள், மாணவர்களிடம் சிறந்த கல்வியையும் ஒழுக்கதையும் கட்டியெழுப்ப வேண்டும். ஆசிரியர்கள் அனைவரும் ஒழுக்கமுடையவர்களாக இருக்க வேண்டும். சம்பளத்திற்கு மாத்திரம் வேலை செய்யவில்லை. உங்களுக்கு இறுதியில் ஓய்வூதியமும் வழங்கப்படவுள்ளது. எனவே அர்ப்பணிப்புடன் வேலை செய்து கிழக்கைக் கட்டியெழுப்புவோம் என தெரிவித்தார்.