கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவை கலைத்துவிடுமாறு ஜனாதிபதி அதிரடி உத்தரவு.

0
845

( க.விஜயரெத்தினம்)

வடகிழக்கை கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி செயலணி உருவாக்கி வடகிழக்கை கட்டியெழுப்புவேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கி வைத்து பேசுகையிலே இவ்வாறு தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 242 பட்டதாரிகளுக்கு சனிக்கிழமை (03.03.2018) மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில்  ஆசிரியர் நியமனம் வழங்கி வைத்து பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கிழக்குமாகாண ஆளுனர் ரோஹித போஹோல்லாகம, பிரதியமைச்சர்களான. M.L.A.M ஹிஸ்புல்லா,. M.S.M அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர்களான அலிசாகிர் மௌலானா, சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாணசபையின் முன்னாள் அமைச்சர் ஆரியபதி களப்பதி மற்றும் கிழக்குமாகாண கல்வியமைச்சின் செயலாளர் ர்.னு.பு.நு.ஆ. திசாநாயக்க, ஆளுனரின் செயலாளர் அஸங்க அபேயவர்த்தன, மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், வலயக்கல்விப் பணிப்பாளர்கள், திணைக்களத் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

322 பாடசாலைகளுக்கு நடமாடும் விஞ்ஞான ஆய்வுகூடங்களுக்கான கடிதங்கள் ஆளுனரால் வழங்கி வைக்கப்பட்டது.

அவர் தொடர்ந்து பேசுகையில் இன்று வடகிழக்கு மாகாணத்தில் காணிப்பிரச்சினை, தொழில் பிரச்சினை, வீட்டுப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றது. வடகிழக்கு மாகாணத்தைத் தவிர வேறு மாகாணங்களில் இங்கிருக்கும் பிரச்சினைகள் குறைவாகத்தான் இருக்கின்றது. மேல் மாகாணத்தை எடுத்துக் கொண்டால் குறைவான பிரச்சினைகள் தான் காணப்படுகின்றது. அதேபோன்று சப்பிரகமுவா மாகாணத்தை எடுத்துக் கொண்டால் பிரச்சினைகள் குறைவாக இருக்கின்றது. எனவே இந்த நாட்டிலுள்ள அனைவரும் அரசியல் வேறுபாடுகளை மறந்து தேசியம், ஒற்றுமை, சகவாழ்வு என்பவற்றுடன் கைகோர்;த்து இந்த நாடடை அர்ப்பணிப்புடன் கட்டியெழுப்ப வேண்டும். இதற்காக நான் அரசாங்க ரீதியில் என்னாலான முழுமையான பணிகளை மேற்கொள்வேன்.

 

இன மத பேதங்களை மறந்து நாம் ஒற்றுமையுடன், பொறுப்புடன் செயற்பட்டு வடகிழக்கை கட்டியெழுப்புவோம். அம்பாறை மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வுகள் கவலையளிக்கும் விடயமாக இருக்கின்றது. யாராக இருந்தாலும் விகாரைகள், பள்ளிவாசல்கள், கோயில்கள் என்பவற்றை உடைத்து சேதப்படுத்தியது பாரிய தவறாகும். இது ஒரு கடும் போக்காளர்களினதும், தீவிரவாதிகளின் செயற்பாடாகும். கடந்த தீவிரவாத செயற்பாட்டின் காரணமாக நாடு அதிர்ந்துபோய் அழிந்து போய் காணப்பட்டது. இதனால் இலங்கையின் மீது வைத்துள்ள சர்வதேச மதிப்பு குறைந்துகொண்டு செல்கின்றது. எந்த லாபமும் இல்லாமல் இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் கசப்பான உணர்வுகளை மறந்து நாட்டுக்கு துரோகம் இழைக்காமல் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டிய தேவை இருக்கின்றது. நாட்டுக்கு தேவையானவற்றை மட்டும் நாம் சிந்தித்து செய்ய வேண்டும். நல்லாட்சி அரசாங்கம் பொறுப்பேற்று 3 வருட காலத்துக்குள் சர்வதேசத்தின் ஒத்துழைப்பையும், மரியாதையையும் சர்வதேசத்திடம் இருந்து நாங்கள் பெற்றிருக்கின்றோம். இன மத பேதங்களை மறந்து நாம் அனைவரும் ஒருதாய் பிள்ளைபோல் செயற்பட வேண்டும். புத்திசாலித்துவமாக செயற்பட வேண்டும். தாய்நாட்டின் மீது அன்பு செலுத்த வேண்டும். சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லீம்கள், பறங்கியர்கள், மலையர்கள் என வேறுபாடு பார்க்காமல் நாம் அனைவரும் இந்த நாட்டின் பிள்ளளைகள் போல் செயற்பட வேண்டும்.

 

இன்று கிழக்கு மாகாணத்தில் மட்டும் பட்டதாரிகள் பிரச்சினை இல்லை. நாடு முழுவதும் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் பிரச்சினை இருக்கின்றது. இதற்காகத்தான் 7 மாதங்களுக்கு முன்னர் விண்ணப்பம் கோரினோம். நேர்முகப்பரீட்சை நடாத்த முடியாமல் போனது. காரணம் அண்மையில் நடைபெற்ற உள்ள+ராட்சிசபை தேர்தல் ஆகும். எதிர்வரும் 6 மாதங்களுக்குள் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கு நல்hட்சி அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நான் மட்டக்களப்புக்கு வருகைதந்தபோது வேலையற்ற பட்டதாரிகள் தங்களின் பிரச்சினை சம்பந்தமாக கடிதம் ஒன்றை தந்தார்கள். இதில் கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் பிரச்சினை சம்பந்தமாகவும் உள்ளடக்கப்பட்டது.

கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லை. மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவில் இருப்பவர்கள் சிலர் 16 வருடம் தொடர்ச்சியாக இருந்திருக்கிறார்கள். மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் பதவிக்காலம் 3 அல்லது 4 வருடங்களாகும். எனவே கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவை கலைத்துவிடுமாறு நான் கிழக்கு மாகாண ஆளுநருக்கு கோரிக்கை முன்வைக்கின்றேன்.

கிழக்கு மாகாணத்தில் நிதிப்பற்றாக்குறை இருந்தால் நான் விசேடமாக நிதி வழங்குவேன். ஏனைய நியமனங்களையும் வழங்குவதற்கு அரசாங்கம் சீக்கரமான நடவடிக்கை எடுக்கும். ஒரு நாட்டின் மிகப்பெரிய சொத்து பட்டதாரிகள்தான். அவர்கள் மூலம்தான் இந்த நாட்டை அறிவு ரீதியாக, ஆளுமை ரீதியாக கட்டியெழுப்ப முடியும். நாட்னது மக்களின் பணம்தான் அரசாங்கத்தின் செயற்பாடாக இருக்கின்றது.

எங்களின் கல்வி முறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும். வெளிநாடுகளில் துறைசார்ந்த கல்விக்கொள்கை இருக்கின்றது. அங்கு வேலைவாய்ப்புக்குரிய தொழில்துறை இருக்கின்றது. ஆனால் இலங்கையின் கல்விக்கொள்கையை மாற்றவேண்டிய தேவை இருக்கின்றது.

மூன்று அல்லது 4 நான்கு வருடங்களில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் கல்வி முறையில் பாரிய வளர்ச்சி தென்படும். ஆசிரியர் தொழில் சிறப்பான தொழிலாகும். ஒரு தாயின் வயிற்றிலிருந்து பிள்ளைகளை மட்டும்தான் பிரசவிக்க முடியும். ஆனால் ஆசிரியர்களினால் விஞ்ஞானிகள், பொறியியலாளர்கள், அரசியல்வாதிகளை இந்த ஆசிரியர்களால்தான் உருவாக்க முடியும். ஆசிரியர் தொழில் புனிதம் மிக்க தொழிலாகும். இது எல்லோருக்கும் கிடைப்பதில்லை. ஆசிரியர்கள், ஆசிரியர் தொழிலை சரியாக நடத்திச்செல்ல வேண்டும். பிள்ளைகளை ஒழுக்கரீதியாக ஆசிரியர்கள் இனங்கண்டு அவர்களை ஒழுக்க சீலர்களாக மாற்ற ஆசிரியர்களால்தான் முடியும். எனவே பிள்ளைகளின் குறைபாடுகளைக் கண்டுபிடிக்க வேண்டியது ஆசிரியர்களின் கடமையாகும்.

எல்லா பிள்ளைகளும் ஆசிரியர்களை கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆசிரியர்கள் என்ன உடை அணிந்து வருகின்றார்கள் என்பதையும், அவர்கள் என்ன உணவு உட்கொள்கின்றார்கள் என்பதையும், ஆசிரியர்களின் கையில் என்ன புத்தகம் இருக்கிறது என்பதையும் மாணவர்கள் உற்றுநோக்கிக் கொண்டிருக்கின்றார்கள். கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி இடைநடுவில் இருப்பதாக ஆளுனர் தெரிவிக்கின்றார். பாதைப்பிரச்சினை உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளையும் நான் நாளை கொழும்புக்குச் சென்று உரிய அதிகாரிகளை அழைப்பித்து கிழக்குமாகாணத்தின் அபிவிருத்தியை முன்னெடுப்பேன். நான் அநேகமான கூட்டங்களுக்குச் சென்றால், பொதுமக்கள் தங்களின் பொருளாதாரப் பிரச்சினைகளைத்தான் கடிதம் மூலம் தெரிவிக்கின்றார்கள். வடகிழக்குக்கு வந்தால் தொழில், காணி, வீடு, உள்ளிட்ட பிரச்சினைகளை தெரிவிக்கின்றார்கள். இதைவிட பிரச்சினைகள் இல்லாத மாகாணமாக மேல்மாகாணம், சப்ரஹமுவ மாகாணம் திகழ்கின்றது.

வடகிழக்கில் பொருளாதாரப் பிரச்சினை உருவாகியதற்குக் காரணம் நாட்டில் நிலவிய யுத்தம் ஆகும். இந்த வடகிழக்கை கட்டியெழுப்புவதற்கு இனம், மதம், மொழி கடந்து அர்ப்பணிப்புடன் செயற்படுவேன். அதற்காகத்தான் வடகிழக்கில் ஜனாதிபதி செயலணியை மிக விரைவில் உருவாக்கி, வடகிழக்கைக் கட்டியெழுப்புவேன். இதனால் சர்வதேசம் இலங்கைமீது வைத்துள்ள அவநம்பிக்கை நீக்கப்படும் என தெரிவித்தார்.