அரசினால் கொண்டு வரப்பட்டுள்ள காணாமல்போனோருக்கான அலுவலகம் என்பது ஒரு ஏமாற்று வித்தை.

0
484

அரசினால் கொண்டு வரப்பட்டுள்ள காணாமல்போனோருக்கான அலுவலகம் என்பது ஒரு ஏமாற்று வித்தை என திருகோணமலை காணாமல்போனோர் சங்கத்தலைவி திருமதி நாகேந்திரன் ஆசா தெரிவித்தார். இது ஜநாவை ஏமாற்ற எடுக்கும் ஒரு நடவடிக்கையாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

திருகோணமலை கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தின் முன்பாக காணாமல்போனவர்கள் சார்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்போராட்டம் ஒருவருடத்தை எட்டியிருக்கும் நிலையில் இன்று காலை 10.00மணியளவில் குறித்த போராட்ட இடத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சங்கத்தினர் ஏற்பாடு செய்து நடாத்தினர்.

இப்போராட்டத்தில் இன்று உள்ளூர் அரசியல் கட்சி பிரதிநிதிகள்,காணாமல்போனோரின் உறவினர்கள்,மனித உரிமைகள் ஆர்வலர்கள் என அதிகளவிலானோர் இப்போராட்டத்திற்கு ஆதரவாக கலந்துகொண்டிருந்தனர்.

இங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் சார்பாக சங்கத்தின் தலைவி திருமதி.ஆசா மேலும் குறிப்பிடுகையில் , நாங்கள் ஜனாதிபதி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களிடமும் பலமுறை சந்தித்து எது வித முன்னேற்றத்தையும் நாம் அடையவில்லை.

ஆனாலும் எமது போராட்டத்தை இடைநிறுத்தப்போவதில்லை. போராட்டத்தில் போக்கை மாற்றுவோமேதவிர போராட்டத்தை நிறுத்தமாட்டோம். ஆரசினால் தற்போது கொண்டுவரப்படும் காணாமல் போனோருக்கான அலுவலகம் என்பது ஒரு ஏமாற்று வித்தையாகவே நாம் பார்க்கின்றோம். இதன்மூலம் சர்வதேசத்தை அரசாங்கம் ஏமாற்றலாம் எம்மை ஏமாற்ற முடியாது.

அரசின் நடவடிக்கைகளில் நம்பிக்கையில்லாத காரணத்தை நாம் சுட்டிக்காட்டி ஊடகங்களுக்கான மகஜர் ஒன்றை நான் வழங்கியுள்ளேன். நாம் அரசியல் வாதிகளை நம்பி ஏமாந்த நிலையில் எமது பிரச்சனைக்கான தீர்வைக்காண ஊடகங்கள் தான் உதவவேண்டும் என நான் கேட்டுக்கொள்கின்றேன்.

அதனால் தான் நாம் இந்த விடயத்தை விளக்கி அறிக்கையை ஊடகங்களுக்கு வழங்குககின்றோம்.ஜனாதிபதி அவர்களை நாம் பலமுறை சென்று சந்தித்துள்ளோம் அப்போதெல்லாம் அவர் தனது இந்த அலுவலகம் அமைக்கும் நடவடிக்கைக்குதவுமாறு கோரிக்கை விடுத்தார்.

இதன்போது பல விடயங்களை நாம் சுட்டிக்காட்டினோம். ஆனால் ஒரு வருடம் பூரத்தி செய்த நிலையிலும் எதiனையும் அவரும் கூட செய்ய வில்லை. அவரது நல்லாட்சியிலும் கூட சிலர் காணாமல் போனமை பற்றி நான் சந்திப்பில் தெளிவு படுத்தியிருந்தேன். ஊதாரணமாக மூதூர் வைத்தியசாலையில் சுகையினமான நிலையில் இருந்த ஒருவர் காணாமல்போனமை தொடர்பாக ஜனாதிபதிக்கு தெளிவு படுத்தியிருந்தோம். காணாமல்போனவர்களை தடுத்து வைத்திருந்ததாக கருதப்படும் முகாம்கள் பற்றிய தகவல்களை வழங்கியிருந்தோம்.

ஆதற்கு அவரது தலமையிலான அரசு ஒருவருடம் களிந்த நிலையிலும் எதனையும் செய்ய வில்லை.

ஆகவே அரசாங்கம் ஜநாவின் மனித உரிமைப்பேரவையில் உறுதியளித்த படி காணமால் போனவர்களின் அலுவலகத்தை அமைப்பதாக தெரிவித்து வருகிறது. அந்த அலுவலகத்தில் எமக்கு நம்பிக்கை இல்லை. ஒருவருடம் கடந்த நிலையிலும் அதனையே அவர்களது நடவடிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன. இது ஜநாவை பேய்காட்டும் நடவடிக்கையாகவே நாம் கருதுகின்றோம்.

ஜநாவை பேய்காட்டும் வகையில் எம்மை ஏன்பேய்காட்டுகிறது இந்த அரசுஎன்று எமக்கு புரியவில்லை. இதற்கு என்ன காரணம் எனத்தான் எமக்குப்புரிய வில்லை. அரசு ஜநாவைப்போன்று எம்iயும் பேய்காட்ட ஏமாற்ற முடியாது.

இந்த போராட்டம் ஒருவருடத்தை தாண்டிய நிலையில் எமது உறவுகள் பனியிலும் வெயிலிலும் பல்வேறு துன்பத்தை தாண்டி போராடி வருகின்றனர்.

பலர் இப்போராட்டத்தில் இருந்து இறப்பைக்கூட தழுவியுள்ளனர். எனவே எமது பிரச்சனைக்கு தீர்வுகாண ஜநாவே நேரடியாக தலையிட வேண்டும் அரசின் நடவடிக்கைகளில் எமக்கு நம்பிக்கையில்லை எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.