ஓட்டமாவடி தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்க கட்டார் கிளை ஏற்பாட்டில் மாபெரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டி

0
307
ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்க கட்டார் கிளையினரின் பஸ் கொள்வனவுத்திட்டத்திற்கு மீதியாகத் தேவைப்படும் நிதியைச் சேகரித்துக் கொள்ளும் நோக்குடன், கட்டார் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் இரண்டாவது மாபெரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டியொன்று எதிர்வரும் 23, 30-03.2018ம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.
கட்டார்-உம் சைட் பொலிஸ் மைதானத்தில் இடம்பெறவுள்ள மேற்படி 6 ஓவர் நொக்அவுட் கிரிக்கட் சுற்றுப்போட்டியில் சுமார் 24 கழகங்கள் மாத்திரம் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதோடு, போட்டியில் இறுதிச்சுற்றில் வெற்றி பெறும் அணிக்கு சுமார் 2500 கட்டார் றியாழ் பணப்பரிசும் வெற்றிக்கிண்ணமும், இரண்டாமிடம் பெறும் அணிக்கு 1500 கட்டார் றியாழ் பணப்பரிசும் கிண்ணமும் பெறுமதியான பரிசில்களும் சகல துறை ஆட்டக்காரர், போட்டித்தொடர், போட்டி சிறப்பாட்டக்காரர், சிறந்த களத்தடுப்பு, சிறந்த பிடி போன்றவற்றுக்கான கிண்ணங்களும் வழங்கப்படவுள்ளன.
மேற்படி கிரிக்கெட் சுற்றுத்தொடரில் பங்கு பற்ற விருப்பமுள்ள கட்டாரிலுள்ள கிரிக்கெட் கழகங்கள் 500 கட்டார் றியாழ்களைச் செலுத்தி தங்களது பதிவுகளைச் செய்து கொள்ள முடியும்.
இதுவொரு பாடசாலை மாணவர்களின் நலன்சார் திட்டத்திற்காக முன்னெடுக்கப்படுவதால், கட்டாரிலுள்ள கிரிக்கெட் கழகங்கள் இப்போட்டியில் பங்கு பெறுவதனூடாக தங்களின் பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
எமது கிரிக்கெட் தொடர் தொடர்பான மேலதிக விபரங்களுக்கும் முன் பதிவுகளுக்கு 5549 6132, 7791 5855, 6603 1219 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.