மட்டக்களப்பு மேற்கு வலயத்திலிருந்து 100பேரைத்தூக்கி, 50 பேரைத்தான் போடப்போறாங்களாம்?

0
495

தற்போது கிழக்கு மாகாண கல்வித்திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படவுள்ள வருடாந்த ஆசிரியர் இடமாற்றத்தில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலிருந்து 100பேருக்கு இடமாற்றம் வழங்கப்படவுள்ளதுடன், பதிலீட்டுக்கு 50பேர்தான் வலயத்துக்கு வழங்கப்படவுள்ளதாக கல்வித்திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

நகர்ப்புறங்களில் மேலதிகமாக ஆசிரியர்கள் குவிந்து காணப்பட பௌதீகவளமோ ஆளணி வளமோ இல்லாத மட்டக்களப்பில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குறிப்பிட்ட வலயத்தை அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பதுடன், அதிகாரிகள்படுவான்கரைப்பிரதேசத்தை புறக்கணிக்கின்றார்கள் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.