மாசி மக திருவிழாவில் ஊடகவியலாளர் சிவம் பாக்கியநாதனுக்குக் கௌரவம்

0
181
அம்பாளுக்கு உகந்த பௌர்ணமி தினத்துடன் கூடிய மாசி மக திருவிழா மட்டக்களப்பு கோட்டைமுனை மகா மாரியம்மன் ஆலயத்தில் வியாழன்
மாலை (01) நடைபெற்றது.

ஆலய பிரதம குரு சிவப்பிரம்மஸ்ரீ சரவணன் குருக்களின் தலைமையில் மூலஸ்தான பூஜை மற்றும் வசந்த மண்டப பூஜை நடைபெற்று அம்பாள் உள்வீதி வலம் வந்தது.
இந்நிகழ்வில் விசேட நிகழ்வாக மட்டக்களப்பு மாநகரசபைக்கு தெரிவு செய்யப்பட்ட அரசடி 10 ஆம் வட்டார உறுப்பினரும் ஊடகவியலாளருமான சிவம் பாக்கியநாதன் அவர்களுக்கு கோட்டைமுனை மகா மாரியம்மன் ஆலய நிர்வாகத்தினர் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தனர்.
மகா மாரியம்மன் ஆலயத்தின் தலைவர் எஸ் சிவலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விஸ்வகுல வாலிபர் சங்கம், இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் கிழக்கு மாகாண ஆழுனர் எஸ். தவராஜா ஆகியோரும் பொன்னாடை மற்றும் மாலையணிவித்துக் கௌரவித்தமையும் குறிப்பிடத்தக்கது.