வாய்க்காலை காணவில்லை : விவசாய ஆரம்ப கூட்டத்தில் முறையிட்ட விவசாயி

0
599

(படுவான் பாலகன்) மூன்று வருடத்திற்கு முன்பிருந்த நீரோடும் வாய்க்காலை காணவில்லையெனவும், தமக்கான வாய்க்காலை ஏற்படுத்தி வழங்குமாறும் மண்முனை தென்மேற்கு பிரதேச விவசாய ஆரம்பக்கூட்டத்தில் விவசாயி ஒருவர் முறையிட்டார்.
மண்முனை தென்மேற்கு பிரதேச சிறுபோகச் செய்கைக்கான விவசாய ஆரம்பக்கூட்டம் இன்று(02) வெள்ளிக்கிழமை கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற போதே இதனைக் குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கூறிய விவசாயி,
மண்முனை தென்மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட மாவடிமுன்மாரி தாந்தாமலை பிரதான வீதிக்கும் எனது நெற்காணிக்கும் இடையிலிருந்த நீரோடும் வாய்க்காலானது மூடப்பட்டுள்ளது, வீதியமைக்கும் போது, நடுவில் மேடாகவும், இருபக்கமும் பள்ளமாகவும் வைத்தே வீதி அமைப்பது வழமை. ஆனால் இவ்வீதி மாத்திரம் நடுவில் பள்ளமாகவும், இருபக்கமும் மேடாகவும் அமைத்தமையினால் மூன்று வருடங்களுக்கு முன்பிருந்த நீரோடும் வாய்க்காலை காணவில்லை. குறித்த வாய்க்காலனது எட்டு அடிக்கு மேலான அகலத்தினையும், 5அடிக்கு மேலான ஆழத்தினையும் கொண்டிருந்தது. இதன்காரணமாக யானையும் பயிர்செய்கையின் போது, வயலுக்குள் நுழையவில்லை. தற்போது வாய்க்கால் இன்மையினால் வீதியே வாய்க்காலாக மாறியிருக்கின்றது. என்றார்.