பொறுப்புக்கூறுகின்ற நிலையில் இருந்து அரசாங்கத்தினைக் காப்பாற்றும் விதமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டு வருகிறது. எங்கள் மக்களுக்கு நீதி கிடைக்கப் பெற வேண்டுமாக இருந்தால் இந்த ஐ.நாவின் மனி உரிமை ஆணையகத்தின் செயற்பாட்டுக்கு வலுச்சேர்க்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டு இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் இவ்வாறு தெரிவித்தார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கையொப்பம் பெறும் நடவடிக்கை நாளை மட்டக்களப்பில் ஆரம்பிக்கப்படவுள்ளமை தொடர்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இக்கருத்துக்கள் வெளியிடப்பட்டன.
வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு மட்டக்களப்பு நகர் காந்தி பூங்காவில் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த கையொப்பம் பெறும் நடவடிக்கை தொடர்பில் மட்டு தாமரைக்கேணி காரியாலயத்தில் கருத்து வெளியிட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டு இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் இவ்வாறு தெரிவித்தார்.
இன்று வியாழக்கிழமை மாலை நடைபெற்ற இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கட்சியின் மட்டக்களப்பு நகரப் பொறுப்பாளர் உதயகுமார் உமா சங்கரும் பங்கு கொண்டிருந்தார்.
ஜநா மனித உரிமை பேரவை 2015 ஆண்டு நிறைவேற்றிய 30 -1 தீர்மானத்தில் தம்மால் ஏற்றக் கொள்ளப்பட்ட கடப்பாடுகளில் இருந்து இலங்கை அரசு விலகியுள்ளதால் இலங்கை அரசு அத்தீர்மானத்தை உதாசீனம் செய்ததாலும் 2017 மாச்சில் வழங்கப்பட்ட இரண்டு வருடகால அவகாசத்தில் முதல் அரைவாசியில் தீர்மானம் 30- 1 இல் நிறைவேற்ற இலங்கை அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்க தவறியள்ளமையினால் போருக்கு பின்னரான தொடர்ச்சியாக பதவிக்க வந்த அரசாங்கங்கள் அனைத்தும் உள்ளக ரீதியாக விசாரணை செய்ய குறைந்த பட்சம் கொண்டிருக்காமையினாலும் தொடர்ந்து ஐ.நாவின் மனித ஊரிமை செயலாளர் நாயகம் அதிர்ப்தியை வெளியிட்டுள்ளார்.
அதன் பிரகாரம் அதற்கு மாற்று வழியாக இலங்கை அரசாங்கத்தை சர்வதேச போர்குற்ற நீதிமன்றில் அல்லது விசேட சர்வதேச குற்றவியல் தீர்பாயத்தில் நிறுத்தவற்கு பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாண தமிழ் மக்கள் தங்களது குரலை ஜ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லவேண்டும் இதற்கு அமைவாக தமிழ் மக்களிடம் கையொழுத்து பெறும் நடவடிக்கை ஆரம்பித்துள்ளோம் எனவே அணைத்து தமிழ் மக்கள், புத்திஜீவிகள், பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றிணைந்து நாளை காந்தி பூங்காவில் ஆரம்பிக்கவுள்ள கையொப்பம் பெறும் றடவடிக்கையில் அணிதிரளமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.