மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு புதிய பிரதான புகையிரத நிலைய அதிபராக ஆறுமுகம் வசந்தகுமார் நியமனம்

0
464
F

பழுலுல்லாஹ் பர்ஹான்)

F
மட்டக்களப்பைச் சேர்ந்த ஆறுமுகம் வசந்தகுமார் மட்டக்களப்பு புகையிரத நிலையத்தின் புதிய பிரதான புகையிரத நிலைய அதிபராக நேற்று 27 செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு புகையிரத நிலையத்திலுள்ள பிரதான புகையிரத நிலைய அதிபர் காரியாலயத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
இலங்கை புகையிரத திணைக்களத்தில் 35வருடங்களாக புகையிரத நிலைய அதிபராக கடமையாற்றிவந்த நிலையிலே இவர் இவ் உயர்பதவியுயர்வை பெற்றுள்ளார்.
மட்டக்களப்பு புகையிரத நிலையத்தின் பிரதான புகையிரத நிலைய அதிபராக கடமையாற்றி நேற்று 27ம் திகதியுடன் ஓய்வு பெற்றுச் சென்ற பிரதான புகையிரத நிலைய அதிபர் எம்.பீ.ஏ.கபூரின் பதவி வெற்றிடத்திற்கே புதிய பிரதான புகையிரத நிலைய அதிபராக ஆறுமுகம் வசந்தகுமார் இலங்கை புகையிரத திணைக்களத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.