KSCயின் கனவு கிரிக்கெட் மைதானத்தின் தொடக்கப்புள்ளி ஆரம்பம்….

0
348
கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் கனவான புற்தரையிலான கிரிக்கெட் மைதானத்திற்கான ஒப்பந்த நிகழ்வு ஈஸ்ட்லகுன் ஹோட்டலில் கழகத்தின் தலைவர் தலைவர் பி.சடாற்சரராஜா தலைமையில் நடைபெற்றது

1972ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கோட்டைமுனை விளையாட்டு கழகம் தாம் பயிற்சிக்காக இந்துக்கல்லூரி மைதானத்தையே பயன்படுத்திய வருகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரை கிரிக்கெட விளையாட்டில்  பாரிய முன்னேற்றங்கள் காணப்படுவதாக தெரியவில்லை இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் இதற்கு மிகப்பிரதான காரணமாக  மைதானமே காணப்படுகின்றது. கடின பந்து போட்டிகளை நடாத்துவதற்கு உரிய மைதானமாக காணப்பட்ட வெபர் மைதானம் மெய்வல்லுனர் போட்டிகளுக்கான மைதானமாக மாற்றப்பட்டதால் அவ்மைதானம் கைநலுவி போக சிவானந்தா மைதானமே தஞ்சமென வாழ்ந்து வரும் எமது வீரர்கள் எப்படி தேசிய மட்டத்தில் சாதிக்க முடியும் இருந்தும் எமது ஒரு சில வீரர்கள் அதிலும் சாதித்து சாதனை படைத்துள்ளது அவர்களின் தனித்திறமையே சாரும். இதற்காக மட்டக்களப்பு கிரிக்கெட் நலன் விரும்பிகளும் அக்கரை கொண்டோரும் ஒரு தீர்க்கமான முடிவை எட்டாததால் கோட்டைமுனை விளையாட்டு கழகம் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரிக்கெட்டை மேம்படுத்தும் நோக்குடன் புலம் பெயர்ந்து வாழும் கழக அங்கத்தவர்களுடன் கலந்துரையாடியதன் பயனாக இன்று இம்மைதானத்திற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
  இம்மைதனம் அமைப்பதற்காக திராய்மேடு கிராமத்தில் 10 ஏக்கர் காணி கோட்டைமுனை விளையாட்டு கழகத்திற்கு வழங்கப்பட்டு அவ்விடத்தில் புற்தரையிலான மைதானம் அமைப்பதற்கான பணிகளை தொடங்குவதற்கான ஒப்பந்தத்தில் கோட்டைமுனை விளையாட்டு கழகமும் இலங்கையில் புற்தரை மைதானம் அமைப்பதற்கு தேர்ச்சி பெற்ற நுகேகொட டிமெல் ஒப்பந்த நிறுவனத்துடனான  ஒப்பந்தம் 20.02.2018 மாலை 2.45மணிக்கு கழகத்தின் தலைவர் பி.சடாற்சராஜா அவர்களாலும் டிமெல் ஒப்பந்த நிறுவனத்தின் உரிமையாளர் னு.சு.டிமெல் அவர்களாலும் ஈஸ்ட்லகுன் ஹோட்டலில்  கைச்சாத்திடப்பட்டது.
  அந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் கலந்து கொண்டதுடன் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான பந்துல வர்னபுர மற்றும் உப்பில் சந்தன ஆகியோரும் கலந்த கொண்டனர். அத்துடன் மட்டக்களப்பு மாவட்ட பாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் திரு.விமல்ராஜ் மட்டக்களப்பு வலயகல்விப்பணிப்பாளர் திரு.பாஸ்கரன் மட்டக்களப்பு கிரிக்கெட் சங்க தலைவர் திரு.ரஞ்சன் பாடசாலை அதிபர்கள் மட்டக்களப்பு வர்த்தக சங்க தலைவர் செல்வராஜா மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கெட் கழகங்கள்  கோட்டைமுனை விளையாட்டு கழக அங்கத்தவர்கள் மற்றும் லன்டன் கோட்டைமுனை கழகத்தின் செயலாளர் திரு உதயராஜ் என பலரும் கலந்து கொண்டனர்.
  இந்நிகழ்வில் கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் நம்பிக்கையாளர் சபையின் இலங்கை பிரதிநிதிகளான திரு.ரஞ்சன் திரு.காசிப்பிள்ளை திரு.சிவநாதன் மற்றும் லன்டன் இருந்து வருகை தந்த நம்பிக்கையாளர் சபையின் பிரதிநிதி திரு.வசிகரன் ஆகியோரே இதை முன்னின்று நடாத்தியது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
 மைதான பணிகள் எதிர்வரும் நவம்பர் மாதத்தில் முடிவடைவதுடன் பார்வையாளர்களின் கட்டிடம் வீரர்களின் தங்குமிட அறைகளுக்கான பணிகள் அதனைத் தொடர்ந்து நடைபெறவுள்ளதாக லன்டன் இருந்து வருகை தந்த நம்பிக்கையாளர் சபையின் பிரதிநிதி திரு.வசிகரன் தெரிவித்துள்ளார்.