பாடசாலை விண்ணப்பதாரர்களுக்கு தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதற்கு பிறப்பு சான்றிதழ் பிரதி போதுமானது

0
443

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் பாடசாலை மாணவர்கள் தமது தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதற்காக தெளிவான பிறப்பு சான்றிதழ் பிரதியை சமர்ப்பித்தல் போதுமானது.

இதற்காக பிரதேச செயலாளர் அலுவலகத்தினால் உறுதி செய்யப்பட்ட அல்லது பதிவாளர் நாயகத்தினால் வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ் பிரதியை சமர்ப்பித்தால் போதுமானதாகும் என்று ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணத்திலக்க தெரிவித்தார்.
இந்த பிறப்பு சான்றிதழ் பிரதி எப்போது பெறப்பட்டது என்பது தொடர்பில் எந்தவித பிரச்சனையும் இல்லை என்று ஆணையாளர் நாயகம் எமது செய்தி பிரிவிற்கு தெரிவித்தார்.
இது தொடர்பாக திணைக்களத்தினால் இதற்கு முன்னர் வெளியிடப்பட்டிருந்த சுற்றறிக்கையில் இந்த பிறப்பு சான்றிதழ் பிரதி 6 மாதங்களுக்குள் பெற்றிருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதனால் பெற்றோர் பல்வேறு பிரச்சனைக்கு உள்ளானார்கள். இதன் காரணமாக 6 மாத காலம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
தெளிவான பிறப்பு சான்றிதழ் பிரதியை சமர்ப்பிப்பதன் மூலம் பாடசாலை மாணவ விண்ணப்பதாரர்களால் தேசிய அடையாள அட்டையை இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும் என்று ஆணையாளர் நாயகம் மேலும் எமது செய்தி பிரிவிற்கு தெரிவித்தார்.