சட்டவிரோதமாக மதுபான உற்பத்தி : கண்டுங்காணாமல் விடப்படுகின்றன

0
338

சட்டவிரோதமாக மதுபான உற்பத்தி போன்ற விடயங்கள் சில சில பிரிவுகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன இவைகள் கண்டுங்காணாமல் விடப்படுகின்றன இவற்றினை பொலிஸ் துறையினரின் பங்களிப்புடன் மாவட்டத்தில் உருப்படியான அபிவிருத்தியை அடைய முயல வேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர் ஜீ:.சிறிநேசன் கேட்டுக்கொண்டார்.

இன்றைய தினம் திங்கட்கிழமை மட்டக்களப்ப மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மட்டு. மாவட்டத்தின் 2018ஆம் ஆண்டுக்கான முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

அபிவிருத்தியின் போது நாங்கள் எதிர்நோக்குகின்ற சவால்கள் பிரச்சினைகள், பிரதேச செயலக மடடங்களிலும் பிரதேச சபை ரீதியாகவும் எதிர் நோக்குகின்ற சவால்கள் பிரச்சினைகள், சட்விரோதமான சில செயற்பாடுகள் கண்டுங் காணமல் சில பிரதேசங்களில் நடைபெற்றுக் கொண்டிருப்பதனால் பொது மக்கள் பல பிரச்சினைகளை மக்கள்எதிர் நோக்குகின்றனர். இவ்வாறான பிரச்சினைகரைள ஒரு ஒழுங்குக்குக் கீழ்கொண்டு வருவது என்பது பற்றி யோசிக்க வேண்டும்.

கடந்த ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலும் இந்த மண் வியாபாரம், கடத்தல், மரக்கடத்தல், கால்நடைகள் சட்டவிரோத கொண்டு செல்லப்படல் இதனை விடவும் சட்டவிரோதமாக மதுபான உற்பத்தி போன்ற விடயங்கள் சில சில பிரிவுகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன இவைகள் கண்டுங்காணாமல் விடப்படுகின்றன. இவற்றுக் கெதிராக சில சயற்பாடுகளைக் கொண்டு செல்லுகின்ற அதே வேளைகளில் சட்டவிரோதமான செயற்பாடுகளை எங்களுடைய பொலிஸ்த் துறையினர் மற்றும் மது வரித்திணைக்களத்தினர், இவர்கள் பங்களிப்புச் செய்து இந்த மாவட்டத்தில் ஒரு உருப்படியான அபிவிருத்தியைச் செய்தல் வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமாரின் வரவேற்புரையுடன் ஆரம்பமான மட்டக்களப்பு மாவட்டத்தின் 2018ஆம் ஆண்டுக்கான முதலாவது அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ச.வியாழேந்திரன் , பிரதேச செயலாளர்கள், திணைக்களத்தலைவர்கள், அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இவ்வருடத்துக்கான ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திற்கு இணைத்தலைவரான பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி, இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோரும் தலைமை வகிக்கவிருந்த போதும் அவர்கள் தவிர்க்க முடியாத காரணங்களால் சமூகமளித்திருக்கவில்லை.

மா.உதயகுமார் புதிய அரசாங்க அதிபராகப் பொறுப்பேற்று முதலாவதாக நடைபெற்ற இந்த ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் கடந்த வருடத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருததித்திட்டங்கள், இவ்வருடத்துக்கான நிதி ஒதுக்கீடுகள், மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தித்திட்டங்கள், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள, நடைபெற்றுக் கொண்டிருக்கும் திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டன.