டெக்நோ பிரைன் இன்டர்நசனல் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த சின்னஞ்சிரார்களது வினைத்திறன் கண்காட்சி.

0
532

(டினேஸ்)

இன்றைய நவீன தொழில்நுட்ப காலங்களில் சிறுவர்களது கல்வி சார் வாழ்வியல்கள் பலதரப்பட்ட பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நல்வழி தீய வழி என வேறுபடுகின்றது.

அதனடிப்படையில் இணையத்தளம் வலையமைப்பு முகப்புத்தகம் செய்தி பரிபாற்றல் தளங்கள் மற்றும் சிறுவர்களுக்கான காடீன் 3D விளையாட்டுக்கள் போன்ற வசதிகள் மூலம் கல்வி கற்கின்ற மாணவர்களது பொழுது போக்குகள் திசை மாறிச்செல்கின்றது.

அச்சிந்தனைகளை மாற்றியமைக்கும் நோக்கில்  அவர்களது மதிநுட்ப ஆற்றல்களை வெளிக்கொண்டுவரும் வகையில் டெக்நோ பிரைன் இன்டர்நெசனல் ( techno brain internation pvt lmt ) நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த சின்னஞ்சிரார்களது வினைத்திறன் மிக்க கண்காட்சி இன்று இல 175 புதிய கல்முனை வீதி கல்லடி முகவரியில் அமைந்துள்ள நிறுவனத்தில் அதன் பணிப்பாளர் கிருத்திகா துஸ்யந்தன் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது சிறுவர்களால் வடிவமைக்கப்பட்ட வினைத்திறண் மிக்க கைப்பணிப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது