வவுணதீவு பிரதேசத்தில் கட்டுத் துப்பாக்கியால் இளைஞர் ஒருவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை!

0
315

(வர்ணன்) மட்டக்களப்பு – வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள கரவெட்டி கிராமத்தில் இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

கரவெட்டியைச் சேர்ந்த ம. அருண்ராஜ் (வயது 21) எனும் இளைஞனே இவ்வாறு சனிக்கிழமை இரவு (24ம் திகதி இரவு) உள்ளுர் தயாரிப்பான, கட்டுத் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவரது சடலத்தையும் அருகிலிருந்த துப்பாக்கியையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில், வவுணதீவு பொலிஸாரும் மட்டக்களப்பு குற்றத்தடவவியல் பொலிஸாரும் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

குறித்த சடலத்தினை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு உடற்கூற்றுப் பரிசோதனைக்காக கொண்டுசெல்லும் நடவடிக்கைகளையும் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.