உர மானிய மொத்த சந்தை விலைக் கட்டணம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில்

0
198

அடுத்த பயிர்ச் செய்கை பருவகாலத்திலிருந்து உர மானியத்திற்கான மொத்த சந்தை விலைக் கட்டணத்தை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஒரு வருடத்திற்கு ஒரு ஹெக்டெயர் பயிர்ச் செய்கை நிலத்திற்கு உரமானியமாக 25 ஆயிரம் ரூபா வைப்பிலிடப்படும். எதிர்வரும் சிறுபோக காலத்தில் இந்த பணம் வைப்பிலிடப்படும் என்று தேசிய உர மூலவள செயலக பணிப்பாளர் அஜித் புஷ்பகுமார தெரிவித்தார்.
நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்தத் தீர்மானங்கள் எட்டப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.