பாரிசவாதஊசி மருந்தேற்றல்இலங்கையில் ஆறு இடங்களில் , மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையும் உள்ளடக்கம்.

0
285

இலங்கை தேசிய பாரிசவாதக் கழகத்தின் ஏற்பாட்டில் “இருளில் இருந்து ஒளியை நோக்கி” எனும் கருப்பொருளில் பாரிசவாத விழிப்புணர்வு நடைப்பயணம் இன்று (24) மட்டக்களப்பில் நடைபெற்றது.

கிழக்கு மாகாணத்தில் முதன் முறையாக மட்டக்களப்பு கல்லடி மீன்பாடு சிறுவர் பூங்காவில் ஆரம்பமான பாரிசவாத நடைப் பயணம் வெபர் மைதானம் வரை சென்றடைந்தது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நரம்பியல் சிகிற்சைக் பிரிவின் நரம்பியல் நிபுனர் தி.திவாகரன் தலைமையில் நடைபெற்ற நடை பவனி மற்றும் விழிப்புணர்வு நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித போகல்லாகம, மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார், மாகாண சுகாதாரப் பணிப்பாளர் கே.முருகானந்தம், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் கிறேஸ் நவரெட்னராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பாரிசவாத நோய்க்கான ஆபத்துக்காரணிகளுக்கான இலவச பரிசோதனைகளும் நடைபெற்றன. அங்கவீனம் மற்றும் மரணத்தை ஏற்படுத்தும் இந் நோய் பற்றிய விழிப்புணர்வு செயல்திட்டத்தை கிராம மக்கள் வரை கொண்டு சேர்க்கும் வகையில் இந்த நடைப்பயணம் ஏற்பாடு செய்யபட்டிருந்தது.

பாரிசவாத அறிகுறிகள் தென்பட்ட ஒருவரை மூன்று மணித்தியாலங்களுக்குள் வைத்தியசாலைக்கு கொண்டுசென்றால் அதற்கான ஊசி மருந்தேற்றல் மூலம் குணமடைய செய்யக்கூடியதாக உள்ளது.

இந்த ஊசி மருந்தேற்றல் சிகிச்சைமுறை இலங்கையில் ஆறு இடங்களில் மட்டுமே காணப்படுவதாகவும் அதில் ஓர் இடமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை காணப்படுவது நம் பிரதேச மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாகும்.

இலங்கையில் பல மாவட்டங்கள் இருந்தாலும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நரம்பியல் சிகிச்சை பிரிவு சிறப்பாக செயற்படுவதன் காரணமாக மட்டக்களப்பில் இந்த நிகழ்வை நடாத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது.