மண்ணெண்ணெய்யுடன் பெற்றோலை கலந்து கொண்டிருக்கும் போது தீ நபர் உயிரிழப்பு

0
205
closeup of the feet of a dead body covered with a sheet, with a blank tag tied on the big toe of his left foot, in monochrome, with a vignette added

யாழ்ப்பாணம், மானிப்பாய் சுதுபளை பிரதேசத்தில் உள்ள நபர் ஒருவர் மண்ணெண்ணெய்யுடன் பெற்றோலை கலந்து கொண்டிருக்கும் போது அது திடீரென தீப்பற்றியதால் அந்நபர் உயிரிழந்ததாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

ஆறுமுகம், துரைராஜா என்ற 56 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையெ உயிரிழந்துள்ளார்.
நீர் இயந்திரத்தை இயக்குவதற்காக மண்ணெண்ணெய்யுடன் பெற்றோலை கலந்து கொண்டிருக்கும் போது பெற்றோல் போத்தலில் தீப்பற்றி அது அவரது உடலிலும் பரவியுள்ளது.
இதனால் பலத்த தீக்காயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.