4000 கலைஞர்களுக்கு நிதியுதவி

0
218

பல்வேறு துறையைச் சேர்ந்த வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட சுமார் 4000 கலைஞர்களுக்கு இவ்வருடத்தில் நிதி உதவி வழங்கப்படவுள்ளது.

இதுவரையில் சுமார் 3500 கலைஞர்கள் பதிவுசெய்திருப்பதாக கலாச்சார திணைக்களத்தின் பணிப்பாளர் அனுஷா கொக்குல பெணான்டோ எமது செய்திப்பிரிவிற்கு தெரிவித்தார்.
வயதான கலைஞர்களுக்கு நிதி உதவிவழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் கீழ் 60 வயதிற்கு மேற்பட்ட ஓய்வூதியம் பெறாத பல்வேறு துறையைச்சேர்ந்த கலைஞர்களுக்கு உதவும் வகையில் பிரதேச செயலாளர் மட்டத்தில் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இவர்களுக்கு 10 ஆயிரம் ரூபா வீதம் நிதியுதவி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா அவர் குறிப்பிட்டார்.
இத்தொகை வருடமொன்றிற்கு வழங்கப்படுகின்றது.  2017ஆம் ஆண்டில் வறுமைக்கோட்டிற்குட்பட்ட சிரேஷ்ட கலைஞர்கள் 1042 பேருக்கு நிதிஉதவி வழங்கப்பட்டதாகவும் பணிப்பாளர் அனுஷா கொக்குல பெணான்டோ மேலும் குறிப்பிட்டார்.